games

img

விளையாட்டு...

மகளிர் உலகக்கோப்பை 2024 ஆஸி., - நியூஸி., இன்று மோதல்

9ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை டி-20 ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாயன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து (குரூப் ஏ) அணிகள் மோதுகின்றன. மகளிர் கிரிக்கெட் பிரிவில் இரு அணிகளும் அதிரடிக்கு பெயர் பெற்ற அணிகள் என்பதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து
நேரம் : இரவு 7:30 மணி

இடம் : ஷார்ஜா மைதானம், துபாய்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட்  ஸ்டார் (ஒடிடி)

ஜெயசூர்யா தலைமை பயிற்சியாளராக நியமனம் உற்சாகத்தில் இலங்கை ரசிகர்கள்

கடந்த 3 ஆண்டுகாலமாக கடுமையான பார்ம் பிரச்சனையில் சிக்கித் தவித்த இலங்கை அணி, முன்னாள் அதிரடி வீரர் ஜெயசூர்யா வரவால் (பயிற்சியாளராக) புத்துணர்ச்சி கண்டு, புதிய பாதைக்கு திரும்பியுள்ளது. அதாவது சூப்பர் பார்முக்கு திரும்பி மீண்டும் பலமான அணியாக உருவெடுத்துள்ளது.  ஜெயசூர்யா தற்காலிக பயிற்சியாளராகவே இதுவரை பணியாற்றி வந்த நிலையில், தற்போது அவர் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2026 வரை ஜெயசூர்யா இலங்கை அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 1996 -ஐப் போல மீண்டும் உலகக்கோப்பையை வெல்வோம் என ஜெயசூர்யா தலைமையிலான அணி சபதம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திசை திரும்பும் சுவாரஸ்யம் களையிழந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள்

கிரிக்கெட் உலகில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த விளையாட்டு உலகிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளுக்கு தனி மவுசு உள்ளது. எல்லைப் பிரச்ச னை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் எலியும், பூனையாய் மோதுவதால் 1970 முதல் 2014 வரை சுமார் 44 ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்திற்கு நிகராக பிரபலமாக இருந்தது. ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின், அதாவது 2014க்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை அரசியல் ஆதாய பொருளாக பாஜகவினர் பயன்படுத்தி வருகின்றனர். விளையாட்டை அரசியல் ஆக்கும் முயற்சிக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருவது வாடிக்கையாக உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டு களாக இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் பெரி யளவு பிரபலமின்றி, சாதாரண போட்டிகளை போன்றே நகர்ந்து வருகின்றன. குறிப்பாக ஞாயிறன்று மகளிர்  உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா  6 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணியின் வெற்றி சமூகவலைத்தளத்தில் சாதாரண  செய்தி யாகவே வலம் வந்தன. பாஜகவின் இந்துத்துவா அரசியலால் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அணி வெற்றி பெற்றாலும், அது  சகோதர-சகோதரர்களின் வெற்றி என்ற  நிலைமை உருவாகியுள்ளதால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே விளையாட்டு சுவாரஸ்யம் திசை திரும்பி வருகின்றன.