கிளப் உலகக்கோப்பை கால்பந்து 2025 அரையிறுதியில் பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட்
சர்வதேச கால்பந்து சம்மேள னத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் நடை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், கடைசி கட்ட காலிறுதி ஆட்டங்களில் பிஎஸ்ஜி, ரியல் மாட்ரிட் ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன. பிஎஸ்ஜி அபாரம் சனிக்கிழமை அன்று இரவு நடை பெற்ற 3ஆவது காலிறுதியில் பிரான்ஸ் கிளப் அணியான பிஎஸ்ஜி - ஜெர்மனி கிளப் அணியான பேயர்ன் மூனிச் அணிகள் மோதின. இரு அணி களும் சரிசம அளவில் பலம் வாய்ந்த வை என்ற நிலையில், இறுதிக்கட்ட கோல்களால் பிஎஸ்ஜி அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 8 நிமிடங்களில் 3 கோல் 4ஆவது மற்றும் கடைசி காலிறுதி ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) - டார்ட்மண்ட் (ஜெர்மனி) அணிகள் மோதின. இந்த ஆட்டம் மிக மிக பர பரப்பாக நடைபெற்றது. முதல் 20 நிமிடங் களில் ரியல் மாட்ரிட் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 90ஆவது நிமிடம் வரை 2-0 என்ற கணக்கிலேயே முன்னிலை வகித் ததால் இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 90ஆவது நிமிடத்திற்கு பிறகு டார்ட்மண்ட் அணி கோலடித்தது (90+2). அடுத்த 2 நிமிடங்களில் ரியல் மாட்ரிட் நட்சத்திர வீரர் மாப்பே கோலடிக்க (90+4) ஆட்டம் விறுவிறுப்பானது. கடைசி கட்டத்தில் டார்ட்மண்ட் அணி மேலும் ஒரு கோலடித்தாலும் (90+8) நேரம் இல்லை என்பதால், ரியல் மாட்ரிட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. கடைசி 8 நிமிடங்களில் இரு அணிகளும் 3 கோல் அடித்த தால், போட்டி நடைபெற்ற மெட் லைப் மைதானம் ரசிகர்களின் ஆரவாரத்தால் குலுங்கியது.
அரையிறுதி ஆட்டங்கள் 1.ப்ளுமினென்ஸ் (பிரேசில்) - செல்சி (இங்கிலாந்து) ஜூலை 8 நள்ளிரவு 2.பிஎஸ்ஜி (பிரான்ஸ்) - ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) ஜூலை 9 நள்ளிரவு
143 ஆண்டுகால பாரம்பரிய மிக்க டென்னிஸ் தொட ரான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் 138ஆவது சீசன் (கிராண்ட்ஸ்லாம் ஆன பின்பு) ஜூன் 30 அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தொடங்கியது. புல் தரை யில் நடைபெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் மற்றும் அதிகளவில் பரிசுத்தொகை கொண்ட தொடரான விம்பிள்டன் ஜூலை 13ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இந்நிலையில், ஞாயிறன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில், தரவரிசை யில் 5ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பிரிட்ஜ், தரவரிசை யில் இல்லாத ஆஸ்திரேலிய வீரர் தாம்ஸனை எதிர்கொண்டார். 6-1, 3-0 என்ற செட் கணக்கில் பிரிட்ஜ் முன்னி லையில் இருந்த போது தாம்ஸன் காயம் காரணமாக வெளியேறினார். இத னையெடுத்து பிரிட்ஜ் காலிறுதிக்கு முன்னேறினார். இதே பிரிவின் மற்றொரு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 17 ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் காச்சாநோவ் 6-4, 6-2, 6-3 தரவரிசை யில் இல்லாத போலந்து வீரர் கமிலா வை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.