games

img

விளையாட்டு...

இப்படியும் ஒரு சம்பவமா?

போலீஸ் உதவியுடன் மைதானம்  வந்த  தென் ஆப்பிரிக்கா வீரர் ரசிகர்கள் கடும் கண்டனம்

ஒருநாள், டி-20, டெஸ்ட் என  மூன்றுவிதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டிகளைக்கொண்ட டி-20 தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 11 ரன்கள் வித்தி யாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.

இதுவரை கேள்விப்படாத விஷயம்

முதல் டி-20 ஆட்டம் பிரச்சனை யின்றி நிறைவு பெற்றாலும், தென் ஆப்பிரிக்கா வீரர் ஒருவர் சொந்த நாட்டில் போலீஸ் உதவியுடன் மைதா னம் வந்து விளையாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

\டர்பன் மைதானத்திற்கு வரு வதற்காக தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அனைவரும் ஹோட்டலில் இருந்து பிரத்யேக பேருந்து மூலம் புறப் பட்டுள்ளனர். ஆனால் ஜார்ஜ் லிண்டே வருவதற்கு தாமதம் ஏற்பட்ட போது, அவர் இல்லாமலேயே பேருந்து புறப் பட்டு சென்றுள்ளது. அதன்பின் அங்கி ருந்த போலீசார் உதவியுடன் ஜார்ஜ் லிண்டே மைதானத்திற்கு வந்துள்ளார். 

தன்னை விட்டு வந்துவிட்டனர் என்ற கோபத்தில் விளையாடினாரோ என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஜார்ஜ் லிண்டே தனது  மிரட்டலான பந்துவீச்சின் மூலம் பாகிஸ் தான் அணியை பிழிந்தெடுத்தார். 4 ஓவர் களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும் கைப்  பற்றிய லிண்டேவுக்கு ஆட்டநாயகன் விருது  அளிக்கப்பட்டது. பேருந்தை தவ றவிட்டு, போலீசார் உதவியுடன் மைதா னத்திற்கு வந்து, பதற்றம் இல்லாமல் அருமையாக பந்துவீசி ஆட்டநாயகன் விருது பெற்ற ஜார்ஜ் லிண்டேவை ரசி கர்கள் பாராட்டு மழையில் நனைய வைத்து வருகின்றனர்.

வருத்தமாக இருக்கிறது

இதுகுறித்து லிண்டே பேசுகையில், “எனது செல்போன் 15 நிமிடங்கள் தாமதமாக நேரத்தை காட்டியது. அதற்கு முன்பாக 4 மணிக்கு ஹோட்ட லில் இருந்து பேருந்துக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் கீழே வந்த போது, என்னை விட்டு பேருந்து மற்ற வீரர்களு டன் புறப்பட்டு சென்றதை பார்த்தேன். அந்த தருணம் மிகவும் மோசமான ஒன்று. நல்ல வேளையாக அங்கு போலீசார் இருந்தனர். அவர்களின் உத வியால் என்னால் மைதானத்திற்கு வர முடிந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சக வீரர்கள் யாருமே நான் பேருந்தில் இல்லாததை கவனிக்க வில்லை. அதனை நினைக்கும் போது தான் வருத்தமாக  உள்ளது. ஆனால் அடுத்தப் போட்டியில் தாமதமாக வர லாம் என்று தோணுகிறது” என அவர் கூறினார்.

கிரிக்கெட் வாரியத்திற்கு எச்சரிக்கை

ஒரு கிரிக்கெட் வீரரை கண்டு கொள்ளாமல் புறக்கணித்து மைதானத்திற்கு வந்த விவகாரம் தொடர்பாக தென் ஆப்பிரிக்கா கிரிக் கெட் வாரியத்திற்கு அந்நாட்டு பாது காப்புத்துறை எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. கேப்டன், துணைக் கேப்டன், சக வீரர்கள், பயிற்சியாளர்கள் குழு, அனாலிஸ்ட், பிசியோதெரபிஸ்ட், மேனேஜர் என ஏராளமானோர் ஒரு அணிக்குள் இருந்தும், தங்களின் வீரர்  ஒருவரை ஹோட்டலிலேயே மறந்து விட்டு புறப்பட்ட சம்பவத்திற்கு ரசிகர் கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.