உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 13ஆவது சுற்று இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகின்றனர். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் இருவரும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் 13ஆவது சுற்றில் டிங் லிரென் - குகேஷ் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.
முக்கியமான கட்டமான 11ஆவது சுற்றில் குகேஷ் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்த நிலையில், 12ஆவது சுற்றில் தோல்வி கண்டு சிறிது பின்னடைவை சந்தித்தார். இன்றைய சுற்று உட்பட மொத்தம் இரு சுற்றுகள் மட்டுமே எஞ்சியுள்ளது. குகேஷ் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கும், டிங் லிரென் சாம்பியன் பட்டத்தை தக்கவைப்பதற்கும் தலா 1.5 புள்ளிகளே தேவையாக உள்ளது. இதனால் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.