games

img

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் தமிழக வீரர் குகேஷ்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் டி.குகேஷ் அசத்தியுள்ளார்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வந்தது. ஏற்கனவே நடந்த 13 சுற்றுகளின் முடிவில் குகேஷ் - டிங் லிரென் ஆகியோர் 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் 14ஆவது மற்றும் இறுதி சுற்று போட்டி இன்று நடைபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன்மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பட்டம் வென்ற இரண்டாவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார்.

மேலும், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ரஷிய வீரர் கேரி காஸ்பரோவ்தான் இதுவரை அந்த பெருமை பெற்றிருந்தார்.