செஸ் விளையாட்டில் சுவாரஸ்யம் 66 வயது கிராண்ட் மாஸ்டரை வீழ்த்திய 9 வயது சிறுவன்
சிந்தனை, புத்திகூர்மை சார்ந்த விளையாட்டு என்பதால், செஸ் விளையாட்டில் வயது, எடை கட்டுப் பாடுகள் மற்றும் ஜூனியர், சீனியர் போன்ற விதிமுறைகள் எதுவும் கிடை யாது. அதனால் செஸ் விளையாட்டில் யார் யாரை வேண்டுமானாலும் எதிர் கொள்ளலாம் என்ற சூழல் உள்ளதால், 10 வயது நிரம்பாத சிறுவர்கள் கூட வயதில் பெரிய வீரர்களை வீழ்த்தும் சம்பவங்கள் அடிக்கடி நிகழும்.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஐஐடி இன்டர்நேஷ னல் ஓபன் செஸ் தொடர் நடைபெற்றது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 66 வயதான கிராண்ட் மாஸ்டர் ராசித், 9 வயது சிறுவன் ஆர்த்தி கபிலுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
9 வயது சிறுவன் நம்மை என்ன செய்ய போகிறார் என்ற எண்ணத்தில் ராசித் அசால்ட்டாக விளையாடினார். ஆனால் சிறுவன் ஆர்த்தி கபில் துல்லியமான நகர்த்தல் மூலம் ராசித்திற்கு கடும் நெருக்கடி கொடுத்து, 63 நகர்த்தலில் வெற்றியை தன் பக்கம் வசமாக்கினார். இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற வீரரை வீழ்த்திய இளம் இந்திய வீரர் என்ற சாதனையை ஆர்த்தி கபில் படைத்திருக்கிறார். இந்திய வம்சாவளி யை சேர்ந்த சிங்கப்பூர் வீரர் அஸ்வத் கவுசிக், தனது 8 வயதில் போலந்து கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தியதே உலக அளவிலான சாதனையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய செஸ் போட்டிக்கு தேர்வு
இந்த வெற்றியின் மூலம் கபில் 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டி யில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். மேலும் புனேவில் நடைபெறவிருக்கும் 9 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய செஸ் போட்டியிலும் பங்கேற்க கபில் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இடியாப்பச் சிக்கலில் இந்தியா\
2025ஆம் ஆண்டில் நடை பெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணிகளின் பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இலங்கை என 5 நாடுகள் இருந்தன. இங்கிலாந்து அணியிடம் நியூஸிலாந்தும், தென் ஆப்பிரிக்கா அணியிடம் இலங்கை அணியும் வீழ்த்ததால் நியூஸிலாந்து, இலங்கை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொட ரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்துவிட்டன. இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் உள்ளன.
தென் ஆப்பிரிக்காவிற்கு கூடுதல் சாதகம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசையில் முதலிடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்கா அணி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று இருக்கும் நிலையில், அடுத்த தாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டி களில் விளையாட உள்ளது. அந்த 2 போட்டிகளில் ஒரு வெற்றியை ருசித்தா லும், தென் ஆப்பிரிக்கா அணி நேரடி யாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். எனவே தென் ஆப்பிரிக்காவுக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்தியாவுக்கு சிக்கல்
இந்தியாவை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இந்த 3 போட்டிகளில் இந்திய அணி, 3 வெற்றிகளை பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். மீதம் உள்ள 3 போட்டிகளில் 2 வெற்றி கள் மற்றும் ஒரு டிரா செய்தாலும் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும், ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறும். ஒருவேளை இந்திய அணி மீதம் உள்ள 2 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியை சந்தித்தால், ஆஸ்திரேலிய அணி அடுத்து இலங்கை அணி உடன் விளை யாட உள்ள டெஸ்ட் தொடரில் ஒரு தோல்வியையாவது சந்திக்க வேண்டும். இந்திய அணி மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் ஒரு வெற்றி மற்றும் 2 தோல்விகளை சந்தித்தால், அதன்பின் 2 நிகழ்வுகள் அரங்கேறி னால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.
அதாவது பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவை 2-0 என வீழ்த்த வேண்டும். ஆஸ்திரேலிய அணி இலங்கையை ஒரு போட்டியில் மட்டுமே வீழ்த்தி இருக்க வேண்டும். இது போன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்படும் என்பதால் இந்திய அணி அடுத்த மூன்று போட்டிகளில் 2 வெற்றிகளை பெறுவது அவசியமாகிறது. இது எல்லாம் நிகழ்ந்தால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் எளிதாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.