games

img

விளையாட்டு...

புரோ கபடி 2024 : கோப்பையுடன் ஹரியானா

11ஆவது சீசன் புரோ கபடி தொடரின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் ஹரியானா - பாட்னா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 32-23 என்ற புள்ளிக்கணக்கில் 3 முறை சாம்பியனான பாட்னாவை வீழ்த்தி ஹரியானா முதல்முறையாக சாம்பியன்  பட்டம் வென்றது.

“பாக்சிங் டே” டெஸ்ட் ஆஸ்திரேலியா அபார வெற்றி

5 போட்டிகளைக் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி “பாக்சிங் டே” என்ற  பெயரில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில்  களமிறங்கிய நிலையில், மூத்த வீரர் ஸ்மித்தின் (140) அபார சதத்தின் உதவி யால் முதல் இன்னிங்சில் 122.4 ஓவர் களில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நிதிஷின் (114) அசத்தலான சதத்தின் உதவியால் 119.3 ஓவர்களில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ், லயன், போலந்து ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 105 ரன்கள் முன்னிலையுடன் இரண் டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி லபுஸ்சாக்னே (70), கம்மின்ஸ் (41), லயன் (41) உள்ளிட் டோரின் நிதான ஆட்டத்தால் 83.4 ஓவர் களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 340 ரன்கள் நிர்ணயம் செய்தது. கடினமான இலக்குடன் களமிறங் கிய இந்திய அணி வழக்கம் போல ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மிக மோச மான அளவில் திணறியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (84), ரிஷப் பண்ட் (30) ஆகிய இருவர் மட்டுமே இரட்டை  இலக்கத்தில் ரன் குவிக்க மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதில் 3 தங்க முட்டைகளும் (டக் அவுட்) அடங்கும்.  இறுதியில் இந்திய அணி 79.1 ஓவர்களில் 155 ரன்களுக்கு ஆட்ட மிழந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றி யின் மூலம் 5 போட்டிகளைக் கொண்ட  பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.  5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

செஸ் விளையாட்டில் ஜீன்ஸ் அணிந்து கொள்ளலாம்
     சர்வதேச செஸ் சம்மேளனம் அறிவிப்பு

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடை பெற்ற உலக ரேபிட் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்துகொள்ள உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் (நார்வே) ஜீன்ஸ் அணிந்து வந்தார். விதிகளின்  படி ஜீன்ஸ் அணிய வேண்டாம்; உடையை மாற்றிக் கொள்ளுமாறு சர்வதேச செஸ்  சம்மேளனம் கேட்டுக்கொண்டது. ஆனால் கார்ல்சன் மறுத்து, போட்டியில் இருந்து விலகிவிட்டார். இதனையடுத்து கார்ல்ச னுக்கு சர்வதேச செஸ் சம்மேளனம் 200 டாலர் (ரூ.17,000) அபராதம் விதித்தது. இந்நிலையில், செஸ் விளையாட்டில் எதற்கு ஆடை கட்டுப்பாடு. இது என்ன கார்ப்பரேட் மீட்டிங்கா?  என உலகம் முழுவதும் கண்டனங்கள் குவிந்தது.  இத்தகைய சூழலில் திங்கள்கிழமை அன்று செஸ் விளையாட்டில் ஜீன்ஸ் அணிந்து கொள்ளலாம் என்றும், இது கார்ல்சனுக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என சர்வதேச செஸ் சம்மேள னம் கூறியது. இதனையடுத்து உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன் ஷிப்பில் கார்ல்சன் விளை யாட உள்ளார் என செய்திகள் வெளியாகி யுள்ளன.