games

img

விளையாட்டு...

உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் காலிறுதியில் தமிழ்நாட்டின் வைசாலி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவு ரவுண்ட் ஆப் சுற்று முடிவில் (11 சுற்றுகள்) தமிழ்நாட்டின் வைசாலி முதலிடத்தை பிடித்து காலிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். 11 சுற்றின் முடிவில் 9.5 மதிப்பெண்களைப் பெற்றுள்ள வைசாலி காலிறுதியில் சீனாவின் ஜு ஜினரை எதிர்கொள்கிறார். 2 நாட்களுக்கு முன்பு உலக ரேபிட் சாம்பியன் பட்டம் வென்ற மற்றொரு இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி 8.0/11 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்து தொடரில் இருந்து வெளி யேறினார். 11 சுற்று முடிவில் முதல் 8 இடங் களைப் பெற்ற நபர்களே நாக் அவுட் சுற்றுக்கு  முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸ் விளையாட்டுக்கே விடுமுறை அட்டவணையில் மாற்றம் செய்ய ரசிகர்கள் கோரிக்கை

உலகின் மிகப்பெரிய விளை யாட்டுகளில் ஒன்றான டென்னிஸிற்கு 10 கோடிக்கும் அதிக மான அளவில் நேரடி ரசிகர்கள் உள்ள னர். டென்னிஸ் உலகில் கிராண்ட்ஸ் லாம், ஏடிபி பைனல்ஸ், டேவிஸ் கோப்பை, ஏடிபி வேர்ல்டு டூர் பை னல்ஸ் உள்ளிட்ட முக்கிய தொடர்கள் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதில் முக்கியமானது கிராண்ட்ஸ் லாம் தொடராகும். ஆண்டுக்கு 4  கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடைபெறு கின்றன. ஜனவரி மாதம் ஆஸ்திரே லிய ஓபனும், மே - ஜூன் மாத இடை வெளியில் பிரெஞ்சு ஓபனும், ஜூன் - ஜூலை மாத இடைவெளியில் விம்பிள் டன் ஓபனும், அமெரிக்க ஓபன் ஆகஸ்ட் - செப்டம்பர் மாத இடைவெளியில் நடைபெறுகிறது. அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடர் முடிந்த பின்பு அடுத்த சில வாரங்களில் முக்கிய டென்னிஸ் தொடர்கள் நிறைவு பெற்று விடு கின்றன. அதன்பிறகு சுமார் 3 மாத காலம் டென்னிஸ் விளையாட்டிற்கு ஓய்வு கால மாகும். மிகப்பெரிய தொடர்கள் எதுவும் நடப்பதில்லை. இதனால் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி யின் அட்டவணையை மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற னர். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கும், பிரெஞ்சு ஓபனுக்கும் இடையே 4 மாத இடைவெளி இருந்தா லும், அந்த 4 மாதத்தில் முக்கிய தொடர்கள் நடைபெறுகின்றன. ஆனால் அமெரிக்க ஓபன் நிறைவு பெற்றப் பின்பு 3 மாத காலம் முக்கிய தொடர்கள் இல்லை. அதனால் தான் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகில் வேறு எந்த விளையாட்டுக்கும் ஓய்வுகாலம் இல்லை. டென்னிஸ் விளையாட்டுக்கு மட்டுமே ஓய்வு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.