ஜனவரி 31ஆம் தேதிக்குள் பாகிஸ்தான் மைதானங்கள் தயாராகிவிடும் பாகிஸ்தான் மைதான திட்ட இயக்குனர் தகவல்
கிரிக்கெட் உலகின் மினி உலகக் கோப்பை என அழைக்கப் படும் சாம்பியன்ஸ் டிராபியின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் நாட்டில் (இந்திய அணி ஆட்டங்கள் மட்டும் - ஐக்கிய அரபு அமீரகத்தில்) பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூர் மைதானங் களில் புதிய கட்டுமானங்களையும் உரு வாக்கி வருகிறது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில், கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூர் மைதானங்கள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. இதற்கு உலகம் முழுவதும் கண்டனங் கள் குவிந்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக சாம்பியன்ஸ் டிராபிக்கான ஏற்பாடுகளை சரியாக செய்யும் என அனுமதி அளித்திருந்த ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் புதன்கிழமை அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இத னால் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி நடத்துமா என்ற கேள்வி கிளம்பியது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் தேசிய மைதான திட்ட இயக்கு னரான பிலால் சவுகான், “3 மைதானங் களும் தயாராக உள்ளது. வேலைகள் எல் லாம் தனது கட்டுப்பாட்டில் உள்ளது. ஜனவரி 31ஆம் தேதிக்குள் மைதானம் தயாராகிவிடும்” என அவர் கூறினார்.
ரஞ்சிக் கோப்பையில் விராட் கோலி நிரம்பி வழிந்த தில்லி மைதானம்
பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய வீரர்கள் யாரும் சரியாக சோபிக்காததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகினர். இத னால் இந்திய வீரர்கள் அனைவரும் ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டி களில் விளையாட வேண்டும் என்ற இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த கோரிக்கையை ஏற்று இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி வியாழக்கிழமை அன்று ரஞ்சிக் கோப்பையில் தில்லி அணிக்காக களமிறங்கினார். ரயில்வேஸ் அணிக்கு எதிரான கோலி ஆட்டத்தைக் காண தில்லி மைதானம் நிரம்பி வழிந்தது. காலை 5 மணி முதலே ரசிகர்கள் வரிசையில் காத்திருந்து போட்டியை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். கோலி விளையாடவிருப்பதால் நார்த் எண்ட், ஓல்ட் கிளப் ஹவுஸ் ஸ்டாண்ட் பகுதிகள் பார்வையாளர் களுக்காக திறந்துவிடப்பட்டன. ரஞ்சிக் கோப்பைக்காக தில்லி மைதானத்தின் நார்த் எண்ட், ஓல்ட் கிளப் ஹவுஸ் ஸ்டாண்ட் பகுதிகள் திறக்கப்படாது. ஆனால் கோலியின் ஆட்டத்தை காண அளவுக்கு அதிகமாக ரசிகர்கள் கூடிய தால் 2 ஸ்டாண்ட் பகுதிகள் திறக்கப் பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் லீக் தொடர் கால்பந்து ரியல் மாட்ரிட், பேயர்ன் மூனிச் அணிகள் அதிர்ச்சி
ஐரோப்பா கண்டத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் லீக் தொடர் உலகளவில் பிரசித்தி பெற்றது ஆகும். உல களவிலான நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெறுவ தால் சாம்பியன்ஸ் லீக் தொடர் உலகக்கோப்பைக்கு நிகரான சுவாரஸ்யத்துடன் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், 2024-2025ஆம் ஆண்டுக்கான சாம்பி யன்ஸ் டிராபி தொடரின் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. மொத்தம் 36 அணிகள் பங்குபெற்ற நிலையில், லிவர்பூல், பார்சிலோனா, ஆர்சனெல், இண்டர் மிலன், அட்லெட்டி, லெவெர்குசென், லிட்டில், அஸ்டன் வில்லா ஆகிய 8 அணிகள் புதிய விதியமுறைகளின்படி நேரடியாக ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 9 முதல் 24 வரையிலான இடங்களைப் பிடித்த அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிரபலமான ரியல் மாட்ரிட், பேயர்ன் மூனிச், பிஎஸ்ஜி, மான்செஸ்டர் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு மட்டுமே இடம்பெற்றுள்ளன. அந்த 4 அணிகள் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.