games

img

விளையாட்டு...

ஆஸ்திரேலிய ஓபனில் அழகிய மாற்றம்

கண் கலங்கிய ஜுவரேவ், ராக்கெட்டை அடித்து நொறுக்கிய சபலென்கா 113 ஆண்டுகால பழமையான மற்றும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் முக்கிய பிரிவான ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் இரண்டு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

ஜுவரேவ்

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-3, 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட் கணக்கில் தரவரிசையில் 2ஆம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜுவரேவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறை யாக ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ் லாம் கோப்பையை கைப்பற்றி அசத்தி னார். சின்னஞ்சிறிய சொதப்பலால் கோப்பையை பறிகொடுத்த சோகத்தில் ஜுவரேவ் மைதானத்திலேயே கண் கலங்கி கதறி அழுதார். அவரை சின்னர் கட்டியணைத்து தேற்றி னார். இது ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்தது.

சபலென்கா

ஆனால் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒரே ஒரு சம்பவத்தால் அங்கு ஹாலிவுட் ஆக்சன் படமே ஓடியுள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் டென்னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையான பெலாரசின் அர்யனா சபலென்காவை 3-6, 6-2, 5-7 என்ற கணக்கில்  வீழ்த்திய அமெரிக்காவின் மேடிசன் கீஸ் முதல்முறை யாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். பட்டம் வென்றதை மேடிசன் கீஸ் எளிமையாக கொண்டாடினார். ஆனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை கைப்பற்ற கடினமாக போராடியும், கோப்பையை வெல்ல முடியாததால் ஆத்திரமடைந்த சபலென்கா மைதானத்திலேயே ராக்கெட்டை (டென்னிஸ் மட்டை) அடித்து நொறுக்கினார். இது மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்தது.

பாயிண்ட் டூ பாயிண்ட்

வழக்கமாக தோல்வி கண்ட கடுப்பில் ஆண்களே ராக்கெட்டை (90% அளவில்) அடித்து நொறுக்குவது வழக்கம். பெண்கள் பிரிவில் (30% அளவில்) இதுபோன்ற சம்பவம் மிகஅரிதாக நிகழும். ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் ஆடவர் பிரிவு அமைதியான கொண்டாட்டம் - கண்ணீர் என்ற சம்பவங்களுடன் நிறைவுபெற, பெண்கள் பிரிவோ கொண்டாட்டம் - ராக்கெட் உடைப்பு என அழகிய மாற்றத்துடன் நிறைவுபெற்றது. அதாவது ஆடவர் பிரிவில் நிகழ வேண்டியது மகளிர் பிரிவிலும், மகளிர் பிரிவில் வழக்கமாக நிகழ வேண்டியது ஆடவர் பிரிவிலும் நிகழ்ந்துள்ளது.

விராட் கோலி - கம்பீர் மோதல்

இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் - கவாஸ்கர்  தொடரில் ஒரே மாதிரி ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்தை எதிர்கொண்டு மிக விரைவாக ஆட்டமிழந்தார். இதனால் விராட் கோலி மீது கடும் விமர்சனம் இருந்தது.  இதனையடுத்து மும்பையில் கோலி இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கருடன் இணைந்து பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இந்திய அணியின் பயிற்சி  குழு இருக்கும் போது கோலி அவர்களை மதிக்காமல், தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், தலைமை பயிற்சி யாளர் கவுதம் கம்பீரை சீண்டியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து கம்பீர் பிசிசிஐ-யிடம்  புகார் அளித்துள்ளார்.  பிசிசிஐ தலையிட்டு கோலியை தில்லி அணியுடன் (ரஞ்சி கோப்பைக்காக) இணைந்து பயிற்சி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. எனினும் இதுகுறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கோலி தமது பயிற்சியை முடித்து விட்டதாகவும் தில்லி அணியில் இருக்கும் இளம் வீரர்களுடன் இணைந்து பயிற்சி செய்ய தாம் ஆர்வமாக இருப்பதாக கூறி பிரச்சனையை முடித்து வைத்துள்ளார்.