ஜெய் ஷா நெருக்கடியா?
பாகிஸ்தான் மைதான விவகாரமா?
ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் ராஜினாமா
கிரிக்கெட் உலகின் மினி உலகக் கோப்பை என அழைக்கப் படும் சாம்பியன்ஸ் டிராபியின் 9ஆவது சீசன் பாகிஸ்தான் நாட்டில் (இந்திய அணி ஆட்டங்கள் மட்டும் - ஐக்கிய அரபு அமீரகத்தில்) பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன்பே சாம்பியன்ஸ் டிராபி நடத்த முடிவு எடுக்கப்பட்டாலும், மற்ற நாடுகளை போல போதுமான அளவில் சர்வ தேச போட்டிகளை நடத்தாததால் மைதானங்களில் புதிதாக புன ரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது அந்நாட்டு கிரிக்கெட் வாரி யம். சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்க இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், போட்டி நடைபெறும் மைதானங்கள் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. வீண் வேலை தற்போது உள்ள மைதான கட்ட மைப்பிலேயே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டியை நடத்தி இருக்க லாம். ஆனால் வீண் வேலையாக சாதாரண புனரமைப்பு என்பதை தாண்டி கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூர் மைதானங்களிலும் புதிய கட்டு மானங்களையும் உருவாக்கி உள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். புதிய கட்டுமான உருவாக்கமே இந்த சிக்கலுக்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகத்தில் ஏற்பட்ட அரசியல் ரீதி யான மாற்றங்கள் மற்றும் குளறுபடி களும் மற்றொரு முக்கிய காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளன. டிக்கெட் விற்பனை எப்போதும் ஒரு பெரிய கிரிக்கெட் தொடர் நடைபெறும் முன்பு சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) போட்டி நடைபெற உள்ள மைதானங்களை ஆய்வு செய்து, போட்டிகளை நடத்துவது பாதுகாப்பானதா? என சரி பார்த்து அனுமதி வழங்கும். ஆனால் பாகிஸ்தான் மைதானங்கள் இன்னும் முழுமையாக தயாராகாத சூழ்நிலையில், இந்த பிரச்சனையை மூடி மறைக்கும் நோக்கத்தில் வேறு வழியின்றி டிக்கெட் விற்பனையை துவக்கியுள்ளது ஐசிசி. மைதானங்கள் தயாராகாத நிலையில் டிக்கெட் விற்பனைக்கு அனுமதி அளித்தது தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது. ஜெப் அலார்டிஸ் ராஜினாமா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டிப்பாக சாம்பியன்ஸ் டிராபிக்கான ஏற்பாடுகளை சரியாக செய்யும் என அனுமதி அளித்திருந்த ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலார்டிஸ் மைதான விவகாரம் காரணமாக தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.ஐசிசி-யின் தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா இருக்கும் நிலையில், ஜெப் அலார்டிஸ் பதவி விலகி இருப்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
ஸ்மித் 10,000
2 டெஸ்ட், 2 ஒருநாள் போட்டிக ளில் பங்கேற்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் புதனன்று தொடங்கியது. டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணிக்காக 4ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 1 ரன் எடுத்தபோது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எட்டிய 4ஆவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் உலகளவில் ஒட்டுமொத்தமாக 16ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆஸ்திரேலிய ஜாம்பவான்களான ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் 10,000 டெஸ்ட் ரன்களை எட்டியவர்கள் வரி சையில் அடுத்த இடத்தைப் பிடித்துள் ளார் 35 வயதான ஸ்டீவ் ஸ்மித். இது வரை 114 டெஸ்ட் போட்டிகளில் விளை யாடியுள்ள ஸ்டீவ் ஸ்மித் 34 சதங் கள் மற்றும் 41 அரை சதங்கள் விளாசியுள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.