games

img

விளையாட்டு...

இன்னும் 40 நாட்கள் மட்டுமே பாக்கி தயாராகாத பாகிஸ்தான் மைதானங்கள்

மினி உலகக்கோப்பை  என  அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 9ஆவது சீசன் பாகிஸ் தான் நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ் தான், வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.  பாகிஸ்தான் இந்த தொடரை நடத்தினாலும் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்கள் கராச்சியில் உள்ள தேசிய மைதானம், லாகூரில் உள்ள கடாபி மைதானம் மற்றும் ராவல்பிண்டி நகரத்தில் உள்ள மைதானம்  என 3 மைதானங் ளில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இன்னும் 40  நாட்களே உள்ள நிலையில், அந்நாட்டு மைதானங்கள் இன்னும் முழுமையாக தயாராகாமல் இருப்பது சர்வதேச கிரிக் கெட் அரங்கில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த 3 மைதானங்களில் இன்னும் கட்டுமானப் பணி முழுமையாக நிறை வடையவில்லை. மைதானங்களின் தயார்நிலை மற்றும் தன்மை தொடர் பான அறிக்கையை பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். அதாவது இன்னும் 33 நாட்களில் ஒப்ப டைக்க வேண்டும்.  ஆனால் 3 மைதானங்களிலும் 70%  அளவிலான கட்டுமானப் பணி மட்டுமே  நிறைவடைந்துள்ளது. இன்னும் 30%  கட்டுமானப்பணி மீதம் உள்ளது. கேலரிகள் இன்னும் தயார் செய்யப்பட வில்லை. பிட்ச் பகுதிகள் இன்னும் முழு மையாக தயாராகவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளது. பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் பாகிஸ்தான் கிரிக் கெட் வாரியம் மைதானம் தொடர்பான அறிக்கையை வெளியிடாவிட்டால் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் வாய்ப்பு ஐக்கிய அரசு அமீரகத்திற்கு சென்றுவிடும் என்பது குறிப்பிடத் தக்கது.

அடிலெய்டு டென்னிஸ் : அரையிறுதியில் பெகுலா

5ஆவது அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர், ஆஸ்திரேலிய நாட்டின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா வின் டாமி பவுல், சகநாட்டு வீரரான ரிங்கியை எதிர்கொண்டார்.  தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பவுல் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதே பிரிவு காலிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோட்ரா, 5ஆவது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸ், தரவரிசையில் இல்லாத பிரான்சின் பெஞ்சமின் ஆகியோரும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர். நவர்ரோ அவுட் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் பெகுலா, தரவரிசையில் இல்லாத சகநாட்டு வீராங்கனையான அஷ்லினை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக அஷ்லின் வெளியேற 6-4, 2-0 என்ற கணக்கில் அதிர்ஷ்ட வாய்ப்புடன் பெகுலா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.  போட்டித் தரவரிசையில் இண்டாவது இடத்தில் உள்ள நவர்ரோ, தரவரிசையில் இல்லாத ரஷ்யாவின் சம்சோனாவிடம் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்து அதிர்ச்சி தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறினார். அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் (2020 முதல்) 5 வருடமே ஆகியுள்ள நிலையில், இந்த தொடரில்  முக்கிய நட்சத்திர வீரர்கள் அவ்வளவாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.