தருமபுரி, ஜன.9- தருமபுரியில் மாதர் சங்கம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், சிறு பான்மை மக்கள் நலக்குழு மற்றும் மாற்றுத்திறனாளி கள் நலச்சங்கம் சார்பில், தருமபுரி மாவட்டம், செங் கொடிபுரத்தில் வியாழனன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.மல்லிகா, தலைவர் ஏ.ஜெயா, சிறுபான்மை மக்கள் நலக்குழு பொறுப்பாளர் எஸ்.கிரைஸாமேரி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்டச் செயலாளர் ஆர்.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, சோ.அருச் சுனன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, மாவட்டக்குழு உறுப்பினர் டி.எஸ்.ராமச்சந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டப் பொருளாளர் தமிழ்செல்வி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.அருள் குமார், தலைவர் குரளரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.