districts

img

இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜன.9- ஊதிய உயர்வு வழங்கக்கோரி, இன்சூ ரன்ஸ் ஊழியர்கள், அதிகாரிகள் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசுக்கு சொந்தமான பொது  காப்பீடு துறைகளான ஓரியண்டல் இன்சூ ரன்ஸ், நேசனல் இன்சூரன்ஸ் யுனைடேட் இந்தியா நிறுவன அதிகாரிகள், ஊழியர் சங் கத்தினர் அகில இந்திய அளவில் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒருபகுதியாக, சேலம் அரசு மருத்துவமனை  அருகே உள்ள ஓரியண்டல் இன்சூரன்ஸ் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் தென்மண்டல பொதுச் செயலாளர் சரசுராம் ரவி தலைமை வகித் தார். அப்போது, 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். காலியாக உள்ள சுமார் 25 ஆயி ரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். ஓய்வூதியர் ஓய்வூதியத்தை 30  சதவிகிதம் உயர்த்த வேண்டும். பொதுக் காப்பீட்டு துறையில் இயங்கும் 4 நிறுவனங் களையும் ஒரே நிறுவனமாக இணைக்க வேண்டும். அவுட் சோர்சிங் முறையை ரத்து  செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.