districts

img

நீர்க்கசிவை தடுக்க புதிய தொழில் நுட்பம் சிறுவாணி அணையில் மத்தியக் குழு ஆய்வு

கோவை, ஜன.9- சிறுவாணி அணையில் நீர்க்கசிவை தடுக்க எந்த வித தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது என்பது குறித்து மத்திய நீர் மேலாண்மை குழுவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி  அணை உள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு தாலுகாவில் பவானி ஆற்றின் கிளை நதி யான சிறுவாணி ஆற்றின் குறுக்கே கடந்த 1984 ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. அணையின் கிழக் குப் பகுதியில் முத்திகுளம் மலை அமைந்து உள்ளது.  இம்மலையில் இருந்து வரும் நீர் வீழ்ச்சி அணையின் முக்கிய தண்ணீர ஆதாரமாக உள்ளது. மொத்தம் 50 அடி  நீர் மட்டம் கொண்ட இந்த அணையில் 44 அடிக்கு மட்டும்  நீரை தேக்க கேரளா பொதுப்பணித் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் கோடை காலத்தில் கோவை நகரில் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த  அணை கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. இதைத்தொடர்ந்து நீர்க்கசிவை தடுக்க எந்த வித தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது என்பது குறித்து மத்திய நீர் மேலாண்மை குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி கள் 4 பேர் அடங்கிய வல்லுனர் குழுவினர் சிறுவாணி அணையை புதனன்று ஆய்வு செய்தனர். அப்பொழுது மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கேரளா பொதுப் பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.  இந்த ஆய்வின் மூலம் கசிவு ஏற்பட்டு உள்ள பகுதிக ளில் பம்பு மூலம் மிக அழுத்தமாக காங்கிரட் கலவையை பீச்சு அடித்து துகள்களை அடைக்க முடிவு செய்யப்பட்டு  உள்ளது. இது தொடர்பாக மத்திய வல்லுனர் குழுவினர் அறிக்கையை அளித்த பிறகு தமிழக அரசு இதற்கான நிதியை குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கேரளா பொதுப் பணித் துறைக்கு வழங்கி கசிவு தடுப்புப் பணிகள் நடை பெறும் என தெரிவித்து உள்ளனர். நீர் கசிவுக்கான தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதன் மூலம் கோடை  காலத்தில் கோவை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க வாய்ப்பு உள்ளது.