திருப்பூர், ஜன.9 - தமிழக மக்கள் பெரிதும் மதிக்கக்கூடிய தந்தை பெரியார் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணை யரிடம், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனு கொடுத் தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தந்தை பெரியார் மீது பொய்யான தகவலை சொல்லி அவ தூறு பரப்பினார். எனவே அவர் மீது சட்டப்படி உரிய நடவ டிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனுக் கொடுத்தனர். இந்த அமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் சண். முத்துக்குமார், மாவட்ட அமைப்பாளர் க.அகிலன், மாநகரச் செயலாளர் ஞா.கார்த்திகேயன், பெரியார் மாணவர் கழக அமைப்பாளர்கள் க.அறிவரசு, இர.மகேசுகுமார் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், திருப்பூர் மாநகர காவல்துறை ஆணை யரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.