கிராமப்புறங்களை நகர்ப்புறங்களுடன் இணைப்பதை கைவிடுக
சிபிஎம் வலியுறுத்தல் தருமபுரி, ஜன.9- தருமபுரி மாவட்டத்திலுள்ள கிரா மப்புற ஊராட்சிகளை, நகர்ப்புற உள் ளாட்சிகளுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும், என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள் ளது. இதுதொடர்பாக, சிபிஎம் தரும புரி மாவட்டச் செயலாளர் இரா.சிசு பாலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தருமபுரி மாவட்டத்தில் பல் வேறு கிராம ஊராட்சிகளை நகராட்சி மற்றும் பேரூராட்சி மன்றங்களுடன் இணைப்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகளை விரி வாக்கம் செய்வது என்ற பெயரில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அர சாணையை ஏற்கனவே மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உள் ளாட்சி பிரதிநிதிகள் சென்னையில் ஆர்பாட்டம் நடத்தி உள்ளாட்சித் துறை செயலாளரிடம் மனு கொடுத் துள்ளனர். மக்களின் கருத்தறிய கிராம சபை கூட்டங்களை நடத்தி, கருத்து கேட்டு அதனடிப்படையில் இணைப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும் எனவும் சிபிஎம் வலியு றுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டத்திலும் மேற் கண்ட அரசாணையைக் கண்டித்து பல்வேறு கிராம மக்கள் பேராட்டங்க ளில் ஈடுபட்டு வருகின்றனர். விவசா யத்தை வாழ்வாதாரமாக கொண் டுள்ள தருமபுரி மாவட்டத்தில் மேற் கண்ட கிராமப்புற ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைப் பதால், ஊரக வேலைத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயத் தொழிலா ளர்களுக்கு வேலை கிடைக்காது. அரசு வழங்கும் இலவச வீடு கிடைக் காது. சொத்து வரி உயர்வு கடுமை யாக இருக்கும். போதுமான கட்ட மைப்பு வசதி இல்லாத நிலையில் விரி வாக்கம் செய்தால் சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட சேவைகளை நகர்ப்புற உள்ளாட்சிகள் வழங்குவதில் மிகுந்த குறைபாடுகள் ஏற்படும். எனவே, மேற் கண்ட கிராமங்களை நகர்ப்புற உள் ளாட்சி அமைப்புகளுடன் இணைக் கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கை எதிர்த்து போராடிய மார்க்சிஸ்ட் கட்சியினர் பொய் வழக்கிலிருந்து ஏழு ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு
திருப்பூர், ஜன.9- அவிநாசி அருகே மதுபானக் கடைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியி னர் தலைமையில் போராட்டத்தில் ஈடு பட்ட 16 பேர் மீது காவல் துறையினர் பொய் வழக்குப் பதிவு செய்தனர். தற் போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள பழங்கரை ஊராட்சி, தண்ணீர் பந்தல், நரிக்குறவர் காலனி அருகே அதிமுக ஆட்சிக்காலத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு புதிதாக டாஸ் மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் அப்பகுதி பொது மக்கள் திரண்டு, 2017 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டு, கைதாகி னர். அத்துடன் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய அவி நாசி ஒன்றியக் கவுன்சிலர் பி.முத்து சாமி, கட்சியின் தற்போதைய ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, பி.பழ னிச்சாமி மற்றும் 10 பெண்கள் உள்பட 16 பேர் மீது அவிநாசி காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளில் பொய் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், திமுக அரசு பொறுப் பேற்ற பிறகு 2021 ஆம் ஆண்டு செப் டம்பர் 13 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டமன்றத் தில், நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மது பானக் கடைகளுக்கு எதிரான போராட் டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அர சால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்ப டும், என்று அறிவித்திருந்தார். ஆனால், அவிநாசி காவல் துறையினர் இந்த வழக்கில் திட்டமிட்டு தாமதம் செய்து பல ஆண்டுகளாக அலைக்கழித்தனர். கடந்த செவ்வாயன்று அவிநாசி குற்ற வியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், தமிழக அரசின் அரசாணையை மேற்கோள் காட்டி, மதுபானக் கடைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது காவல் துறை பதிவு செய்த வழக்கைத் தள்ளு படி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர் வை.ஆனந்தன் கேட்டுக் கொண் டார். இதைத்தொடர்ந்து நீதித்துறை நடு வர் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்து குற்றம் சாட்டப்பட்ட 16 பேரையும் விடு வித்தார்.
சீமானை கைது செய்யக்கோரி புகார்
சீமானை கைது செய்யக்கோரி புகார் கோவை, ஜன.9- தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்பினர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் வியாழ னன்று மனு அளித்தனர். வடலூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில், அவதூ றான கருத்துக்களை பேசி இருந்தார். இதற்கு தமிழ்நாடு முழு வதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர காவல் ஆணையரிடம், திக, திவிக, தபெதிக உள்ளிட்ட அமைப்பினர் சீமான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இது குறித்து பேசிய பெரியார் அமைப்பினர் கூறும் போது, தந்தை பெரியார் பேசாத ஒரு விஷயத்தை மேற்கோள் காட்டி, அவர் கூறியதாக அருவருக்கும் வகையில் கருத்துக்களை சீமான் பேசியுள்ளார். சமூக சீர்திருத்தம், பெண் விடுதலைக்காக போராடிய தந்தை பெரியார் குறித்து தொடர்ந்து தவறான கருத்துக்களை கூறிவரும் சீமான் மீது கடுமை யாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்தாக தெரிவித்தனர்.
விபத்தில் தூய்மைப் பணியாளர் பலி
கோவை, ஜன.9- பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தூய்மைப்பணியாளர், வாகன விபத்தில் உயிரி ழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துவ மனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றி வருபவர் ஊழியர் ஸ்ரீராம். இவர் புதனன்று இரவு பணி முடிந்து பேருந்தில் சென்று நஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் இறங்கி சாலையை கடக்க முற்பட்டபோது. கார் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முத லுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரி ழந்தார். அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவம னைக்கு ஸ்ரீராம் உடல் கொண்டு வந்த பொழுது மருத்து வர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆம் புலன்ஸ் ஓட்டுநர்கள் ஒன்று கூடி மலர் வாளையம் வைத்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.
தொழிலாளர் பயன்பெறும் மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை
திருப்பூர், ஜன.9 - வெள்ளக்கோவிலில் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் போதிய மருத் துவர்கள் இல்லாததால், அவசர சிகிச் சைகூட அளிக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. அரசு உடனடியாக போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என இங்கு சிகிச்சைக்கு வருவோர் எதிர் பார்க்கின்றனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா வெள்ளக்கோவிலில் அரசு சமுதாய சுகாதார நிலையம் செயல் பட்டு வருகிறது. சித்த மருத்துவம், கண் மருத்துவம், பல் மருத்துவம், பிசியோ தெரபி, தாய் சேய் நல சிகிச்சை மையம் உள்ளது, ஆய்வகம் போன்ற மருத்துவ பிரிவுகளும் உள்ளன. வெள்ளகோவில் சுற்றுவட்டா ரத்தில், 200க்கும் மேற்பட்ட நூற்பாலை கள், ஆயில் மில்கள், விசைத்தறி கூடங் கள், அரிசி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் வடமாநில தொழிலா ளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு தினசரி 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும் வெளிமாநில தொழிலாளர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் இங்கு 8 மருத்து வர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒரு பெண் மருத்துவர் மட்டுமே உள் ளார். அவர் வட்டார மருத்துவ அலுவல ராகவும் உள்ளதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தவிர வேறு சில நிர்வாகப் பணிகளையும் மேற் கொள்ள வேண்டியுள்ளது. இதனால், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடிவதில்லை. சில நேரங்களில் தீ மற்றும் சாலை விபத்துகளில் சிக்கி சிகிச்சைக்கு வரு வோருக்கு முதலுதவி கூட கிடைக்காத நிலை காணப்படுகிறது. அதேபோல, ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் புத னன்று வரை கர்ப்பிணிகளுக்கு பரி சோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுவதால் காய்ச்சல், சளி போன்ற சாதாரண பாதிப் புகளுக்கு கூட சிகிச்சை அளிக்க முடி யாத நிலை ஏற்படுகிறது. எனவே, அரசு சமுதாய சுகாதார நிலையத்துக்கு போதிய அளவில் மருத்துவர்களை நிய மிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என இப்பகுதி மக்கள் கோருகின்ற னர்.
படுகுழி சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்: மார்க்சிஸ்ட் கட்சி முடிவு
திருப்பூர், ஜன. 9 - திருப்பூர் மாநகராட்சி தண்ணீர்பந்தல் காலனி முதல் வேலம்பாளையம் வரை, மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப் பாட்டிலுள்ள சிதிலமான சாலையை சீர மைக்க வேண்டும், இல்லாவிட்டால் போராட் டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கட்சி கூறி யுள்ளது. ஏற்கெனவே குண்டும், குழியுமாக இருந்த இந்த சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒட்டுப் போடப்பட்டது. ஆனால் மீண்டும் இச் சாலையின் நடுவில் திடீரென பெரும் பள்ளம் தோண்டி, அரை குறையாக மூடியுள்ளனர். இதனால், இச்சாலையைப் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தண் ணீர்ப் பந்தல் காலனி, திலகர் நகர், புதுக்கா லனி, வேலம்பாளையம் கிளைகளின் சார் பில், உடனடியாக சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி பதாகைகள் கட்டியுள்ளனர். இது குறித்து, மாநில நெடுஞ்சாலைத் துறை இணைப் பொறியாளர் ராஜேஷிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பா ளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால் கேட்டபோது, ‘எங்களுக்குத் தெரியாமல் மாநகராட்சி அதிகாரிகள், குழாய் பதிக்க சாலையைத் தோண்டியுள்ளனர். தற்போது, சாலை சீரமைப்புக்கான செலவுத்தொகை யைக் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்கள் கொடுத்தவுடன் சாலை சீரமைக்கப் படும்’ என்று கூறியிருக்கிறார். இரு அரசுத் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பில் லாததால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மேற்கண்ட சாலையை விரைந்து சீர மைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறியுள்ளனர்.
புதிரை வண்ணார் சமூகத்தினர் தாட்கோவில் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர், ஜன. 9 – புதிரை வண்ணார் சமூகத்தினர் சிஎம் அரைஸ் திட்டத்தில் தொழில் முனைவோராக மானியத்துடன், கடன் பெற விண்ணப்பிக்க லாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். திட்ட மதிப்புத் தொகையில் 35 சதவிகித மானியம் அல்லது ரூ.3.50 லட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகையை மானியத்து டன் வங்கிக் கடன் வழங்கப்படும். http://ne wscheme.tahdco.com இணையதள முக வரியில் விண்ணப்பிக்கலாம். பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சி மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் இனத்தைச் சேர்ந்த, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, பட்டயப்படிப்பு மற்றும் ஏதேனும் பட் டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் தொழில் நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சியில் சேர்ந்து பயில லாம். இப்பயிற்சி முடித்தவுடன் பயிற்சி அளிக் கும் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஏற் படுத்தித் தரப்படும். பயிற்சியில் சேர தாட்கோ இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், 5ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூர். 94450 29552, 0421 2971112 என்ற முகவரியில் தொடர்பு கொள்ள லாம்.
பல்லடம் அருகே மினி லாரி விபத்து
திருப்பூர், ஜன.9- நாமக்கல்லில் இருந்து கோவைக்கு புதனன்று இரவு முட்டைகளை ஏற்றி வந்த மினி லாரி, திருப்பூர் மாவட்டம் பல் லடம் காளிவேலம்பட்டி பிரிவு அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி னர். இந்த விபத்தில் லேசான காயமடைந்த ஓட்டுநர் நந்த குமார் மற்றும் கந்தசாமி ஆகியோருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முறைகேடாக மின் இணைப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
முறைகேடாக மின் இணைப்பு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் அவிநாசி, ஜன. 9 - அவிநாசி கோட்ட மின்சார வாரியத்தில் மாதாந்திர குறை தீர்ப்பு கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் விஜ யேஸ்வரன் தலைமை வகித்தார். கோட்ட செயற்பொறி யாளர் பரஞ்சோதி பங்கேற்றார். இதில், திருப்பூர் பாண்டியன் நகர் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியிலுள்ள வணிக வளாகத்துக்கு பல மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த வணிக இணைப்பை முறைகேடாக வழங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் வடக்கு வட்டம், ஆர்.கே.நகர் மின்வாரிய அலுவலகம் போயம்பாளை யம் கிழக்கு பகுதியில் எவ்வித அனுமதியின்றி சட்டவிரோ தமாக பொதுவழித்தடத்தில் தனியார் தேவைக்காக அமைக் கப்பட்ட மின்மாற்றியை அகற்ற வேண்டும். அதேபோல ஆர்கே நகரில் அரசுக்குச் சொந்தமான ரூ.10 கோடி மதிப்பி லான நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, வர்த்த கரீதியான இணைப்பு பெற்றுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் அ.சரவ ணன் மனுக் கொடுத்தார்.
சிஐடியு, சிபிஎம் முயற்சியால் கேம்ப் பெண் தொழிலாளி மீட்பு
கோவை, ஜன.9- கோவை, கேபிஆர் பஞ்சாலையில் அடைத்து வைக்கப்பட்ட கேம்ப் பெண் தொழி லாளியை சிஐடியு மற்றும் சிபிஎம் முயற்சி யால் மீட்கப்பட்டார். கோவை மாவட்டம், அரசூர் கேபிஆர் பஞ்சாலையில் 3500 க்கும் மேற்பட்ட பணியா ளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில், பாதிக்கும் மேற்பட்டோர் திருமணம் ஆகாத இளம் பெண் தொழிலாளிகள். இந்நிலையில் இந்த மில்லில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் கடந்த எட்டு மாதங்க ளாக கேம்ப் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தமது பெற்றோரை பார்த்து வருவ தற்கு சொந்த ஊருக்கு செல்வதற்கு ஆலை நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளார். கேம்ப் தொழிலாளியாக வேலை செய்பவர்கள் அங் கேயே தங்கி வேலை செய்ய வேண்டும் வேலை முடிந்த பின்னரும் வெளியில் செல்வ தற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. தமது பெற்றோரை பார்க்க செல்ல வேண்டும் என் கிற கோரிக்கையை பஞ்சாலை நிர்வா கம் ஏற்கவில்லை எனத்தெரிகிறது. இதனால், மனமுடைந்த பெண் தொழிலாளி தமது வீட் டிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த விவரங்களை கேட்ட பெற்றோர் கள், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சிஐடியு அலுவலகம் சென்று விவரங்களை தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர்கள் கோவை மாவட்ட சிஐடியு நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறி பெண் தொழிலாளியை மீட்டுத் தரு மாறு கேட்டுள்ளனர். இதனையடுத்து சிஐடியு மாவட்டத்தலை வர் கே.மனோகரன், செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கே.ரத்ன குமார், எம்.ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சூலூர் ஒன்றிய குழுச் செய லாளர் சந்திரன் உள்ளிட்ட திரளானோர் சம் பந்தப்பட்ட பஞ்சாலைக்கு சென்றனர். அங்கு இருந்த பஞ்சாலை நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் வாக்குவா தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பெண் தொழிலாளியை விடுவித்தனர். பின்னர் வெளியே வந்த பெண் தொழி லாளி சிஐடியு, வாலிபர் சங்கம் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிக ளுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு தோழர்களின் பாதுகாப்புடன் ஆலை நிர்வா கம் இளம் பெண் தொழிலாளியை ஊருக்கு தமது சொந்த வாகனத்தில் அனுப்பி வைத்த னர்.
குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி
குப்பைகளை எரிப்பதால் பொதுமக்கள் அவதி தருமபுரி, ஜன.9- கடத்தூர் அருகே குப்பைகளை எரிப்பதால், சுவாசக் கோளாறால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்ற னர். தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், புளியம்பட்டி ஊராட்சியில் தேக்கல் நாயக்கம்பட்டி, ஆகிய கிராமங்கள் உள்ளன. இப்பகுதியிலுள்ள சிறப்பு வாய்ந்த பசுவேஸ்வரர் கோவிலில் குழந்தைகளுக்கு சந்தோலை வழங்கப்பட்டு வரு கிறது. இதனால் இதை வாங்குவதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் குழந்தைகளுடன் வந்து செல்கின்றனர். இந்த கோவில் பகுதிக்கு பின்புறம் ஊராட்சிக் குட்பட்ட பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் டயர், பிளாஸ் டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளையும் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் வெளியேறும் கரும்புகை, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரு பவர்களும், சுவாசக்கோளாறால் பாதிக்கப்படும் சூழ்நிலை இருந்து வருகிறது. இப்பகுதியில் குப்பைகளை கொட்டக் கூடாது என ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், தொடர்ந்து குப்பைகள் எரிக்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பை எரிப்பதை நிறுத்த வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈஷா மைய டி சர்ட் அணிந்த வாலிபர் தூக்கில் தொங்கியபடி மரணம்
கோவை, ஜன 9- ஈஷா யோகா மைய டி சர்ட் அணிந்த வாலிபர் தூக்கில் தொங்கியபடி மரணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை ஆலந்துறை அடுத்த செம்மேடு பகுதியில் ஈஷா யோகா மையம் அமைந்துள் ளது. இம்மையத்தில் மர்மத்திற்கும், சர்ச் சைக்கும் பஞ்சமே இல்லை என்கிற அள வில் புகழ் பெற்று விளங்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் ஈஷா மையத் தில் இருந்து தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அப்பெண் மர்மமான முறையில் ஈஷா மையத் தின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இருந்து வந்த ஒருவர் இங்கு சிறுவர்களை நிர்வாணப்ப டுத்தி கொடுமை செய்வதாக போத்தனூர் காவல் நிலையத்தில் நேரிடியாக புகார் அளித் தார். இந்நிலையில், இம்மையம் அமைந் துள்ள, ஆலாந்துறை அடுத்த நரசிபுரம் பகுதி யில் உள்ள தடுப்பணை அருகே உள்ள பலா மரத்தில் ஈஷா யோகா மைய டி-ஷர்ட் அணிந்த வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி சடல மாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர். அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். அந்த வாலிபரை சோதனை செய்த காவல் துறையினர் அவரிடம் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்ற எந்த அடையாளமும் இல்லாததால் அவர் யார்? எதற்காக இங்கு வந்தார். தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டு தொங்க விட்டுச்சென்றார்களா, ஈஷா டீ சர்ட் அணிந்தி ருப்பதால், அந்த மையத்தின் ஊழியரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உதகையில் இ-பாஸ் நடைமுறையால் குறைந்து வரும் சுற்றுலாப் பயணிகள்
உதகை, ஜன.9- நீலகிரி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டை காட்டிலும், 2024 ஆம் ஆண்டு 15 சதவீதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது என தோட்டக் கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர். இந்தியாவில் உள்ள மலை வாசஸ் தலங்களில் நீலகிரி மாவட்டம் தனக் கென தனி இடத்தை பிடித்துள்ளது. இத னால், நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இத மான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுக ளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். பொதுவாக ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் முதலாவது சீசனும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங் களில் இரண்டாவது சீசனும் களைகட் டும். கொரோனா பரவல் முடிந்த பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டும், கடந்த ஆண் டும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதி கரித்து காணப்பட்டது. குறிப்பாக 2 ஆவது சீசன் மற்றும் தீபாவளி, கிறிஸ்து மஸ் பண்டிகை, பள்ளி விடுமுறை நாட்க ளில் அதிக அளவில் சுற்றுலாப் பயணி கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்த னர். இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டில் உதகை அரசு தகவல் பூங்காவிற்கு 23.95 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டில் 28.18 லட்சம் பேர் வந்த நிலையில், கடந்தாண்டு 4.2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் எண் ணிக்கை குறைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. இதன் காரணங்களால் சுற்றுலாப் பயணி கள் வருகை குறைந்து இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 லட்சம் பேர் உதகை தாவரவியல் பூங்காவுக்கு வருவார்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 30 லட்சம் பேர் வந்த னர். ஆனால், கொரோனா பாதிப்பு கார ணமாக 2021 ஆம் ஆண்டு 5 லட்சம் பேரும், 2022 ஆம் ஆண்டு 16.89 லட்சம் பேரும் மட்டுமே வந்தனர். இதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்ததால் 28.18 லட்சம் பேரும், 2024 ஆம் ஆண்டு 23.95 லட்சம் பேரும் வந்தனர். 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், 2024 ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று குறைந்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் சுற்றுலாப் பய ணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.