மேட்டுப்பாளையம், ஜன.9- சிறுமுகை பகுதியில் யானை தந்தங் களை விற்பனைக்காக பதுக்கி வைத்தி ருந்த ஐந்து பேர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறை வாக உள்ள ஒருவரை தீவிரமாக தேடி வரு கின்றனர். கோவை வனக்கோட்டம், சிறுமுகை வனச்சரகம் ஓடந்துறை பிரிவு, சிராஜ் நகர் பகுதியில் யானை தந்தங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகளுக்கு ரகசிய தக வல் கிடைத்தது. இதனடிப்படையில், சிறு முகை வனச்சரக அலுவலர் மனோஜ்குமார் மற்றும் சரகப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து மேட்டுப்பாளையம் சிராஜ் நகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டி ருந்த யானை தந்தங்களை அதிரடியாக கைப் பற்றினர். மேலும், இவ்வழக்கில் யானை தந் தங்களை விற்பனை செய்யும் நோக்கில் மறைத்து வைத்திருந்த கொளஸ் மைதீன் (47), ரவி (47), வீரன்(எ) ஆண்டிசாமி (47), கிருஷ்ணகுமார் (36), குமார் (45) ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். தலைமறை வாக உள்ள மணிகண்டன் என்பவரை தீவிர மாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறை யில் அடைக்கப்பட்டனர்.