திருப்பூர், ஜன.9 - திருப்பூர் மாவட்டத்தில் பொங்கல் பரி சுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கே.அய்யம்பாளையம் நியாய விலைக்கடையில் வியாழனன்று மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தொடக்கி வைத்தார். தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு டன் மொத்தம் 2.20 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 99 ஆயிரத்து 183 குடும்ப அட்டை தாரர்களுக்கு 799 டன் பச்சரிசியும், 799 டன் சர்க் கரையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு கொள்முதல் செய்ய ரூ.2.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கே.அய்யம்பாளையம் நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13ஆம் தேதி வரை நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக் கொள்ளலாம். கூட்டநெரிசலைத் தவிர்க்க, தினசரி 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பரிசுத்தொகுப்பு விநியோ கிக்கப்படும் என்று ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் தெரிவித்துள்ளார்.