நாமக்கல், ஜன.9- தட்டாங்குட்டை ஊராட்சியை பள்ளிபாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் தாலுகா, தட்டாங் குட்டை ஊராட்சியை பள்ளிபாளை யம் நகராட்சியுடன் இணைக்க உள் ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் நிர் வாக ரீதியாக பொதுமக்கள் தங்கள் உள்ளாட்சிப் பணிகளுக்கு பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகும். மேலும், கிராம ஊராட்சியாக உள்ள சூழலில் 42க்கும் மேற்பட்ட கிராம நலத்திட்டங்கள் தற்போது கிடைத்து வருவது முழுமையாக பறிபோகும். குறிப்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப் புத் திட்டத்தால் பயனடையும் ஆயி ரக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்பு பறிபோகும். கிராமப்புற ஊராட்சிக்கான இலவச வீடு வழங் கும் திட்டம், விவசாயக் கடன் உள் ளிட்ட எண்ணற்ற சலுகைகள் பறிக் கப்படும். சொத்து வரி, தொழில் வரி பல மடங்கு உயர்ந்து, சிறு தொழில் நடத்தக்கூடியவர்களின் வாழ்வா தாரம் முழுமையாக பாதிப்படை யும். எனவே, தமிழக அரசின் இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும், என வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள், விவசாயி கள் வியாழனன்று கல்லாங்காட்டு வலசு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குமா ரபாளையம் வட்டாட்சியர் சிவக் குமார், காவல் ஆய்வாளர் தவமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது, ஊராட்சியை இணைக் கும் முடிவை கைவிடுவதாக எழுத் துப்பூர்வமாக கடிதம் கொடுத்தால், கலைந்து செல்வதாக போராட்டக் காரர்கள் தெரிவித்து, மறியலை தொடர்ந்தனர். இப்போராட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.தனேந்தி ரன் தலைமை வகித்தார். படைவீடு பேரூராட்சியின் முன்னாள் தலை வரும், விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளருமான பி.பெரு மாள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் செல்லமுத்து மற்றும் தட் டாங்குட்டை ஊராட்சி கவுன்சிலர் கள், பொதுமக்கள், விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து, நகராட்சி மண்டபத்தில் அடைத்து, மாலையில் விடுவித்தனர். அப் போது, மாவட்ட நிர்வாகமும், தமி ழக அரசும் பொதுமக்கள் கோரிக் கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், தொடர் காத்திருப்புப் போராட்டம் நடை பெறும் என போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.