பரபரப்பான கட்டத்தில் மும்பை டெஸ்ட்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 ஆட் டங்களில் நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொட ரை கைப்பற்றிய நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி மகா ராஷ்டிரா மாநிலம் மும்பை யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஜடேஜா (5 விக் கெட்டுகள்) - வாஷிங்டன் சுந்தர் (4 விக்கெட்டுகள்) ஜோடியின் சுழற்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 65.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்சல் 82 ரன்கள் குவித்தார். பின்னர் தனது முதல் இன்னிக்ஸை தொடங்கிய இந்திய அணி நிதான வேகத்தில் ரன் குவித்து 59.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிக பட்சமாக சப்மன் கில் 90 ரன்கள் விளாசினார். அதே போல நியூஸி லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக அஜாஜ் படேல் 5 விக்கெட் டுகளை வீழ்த்தினார். 28 ரன்கள் பின்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொ டங்கிய நியூஸிலாந்து அணி மீண்டும் இந்திய சுழற்பந்துவீச்சில் கடுமையாக திணறியது. அஸ்வின் (4 விக்கெட்டுகள்) - ஜடேஜா (3 விக்கெட்டுகள்) - வாஷிங்டன் சுந்தர் (1 விக்கெட்) என மூவரும் நியூஸிலாந்து பேட்டர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். ஆகாஷ் தீப் (1 விக்கெட்) தனியாக வேகத்தில் மிரட்ட, நியூஸிலாந்து பேட்டர் கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூஸிலாந்து அணி 43.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து இருந்தது. பிலிப்ஸ் (26) - அஜாஜ் படேல் (7) களத்தில் உள்ளனர். இந்திய அணியை விட நியூஸி லாந்து அணி 143 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், ஞாயிறன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
என்னத்த சொல்ல...
பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் வீரர்- வீராங்கனைகளின் திறமைக்கு மத்தியில் மைதான கிளைமேக்ஸ் ஒன்றும் உள்ளது. அந்த கிளைமேக்ஸ் யாதெனில் சீதோஷ்ண காலநிலைக்கு ஏற்ப மைதான அமைப்பு இருக்கும். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மிதமான வெப்பநிலை (மழை, குளிர்) நிலவுவதால் அங்குள்ள மைதானங்கள் உயி ரோட்டமாக இருக்கும். அதாவது அதிகமாக பவுன்சர் எகிறும் தன்மை உடையதாக பிட்ச் பகுதி இருக்கும். அதே போல கலப்பு வெப்பநிலை (வெயில், மழை, குளிர்) கொண்ட நாடுகளான இந்தியா, இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் மைதான பிட்ச் 2 வகையாக (மழை, குளிர் - உயிரோட்டம், வெயில் - மிதமான) மாறும். இதுதான் கிரிக்கெட் மைதானங்களுக்கும், காலநிலைக்கும் உள்ள கிளைமேக்ஸ் ஆகும். ஆனால் தற்போது இந்தியாவில் மிதமான வெப்பநிலை (மழை, குளிர்) நிலவும் சூழலில், அதற்கேற்றார் போல இந்திய ஆடுகளங்கள் சாதாரண நிலையிலேயே நீடிப்பது சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - நியூஸிலாந்து அணி கள் விளையாடி வரும் டெஸ்ட் போட்டிகளின் கடைசி 2 ஆட்டங்களிலும் (புனே, மும்பை) வேகம் எடுபடவில்லை. மாறாக சுழற்பந்து வீச்சு எடுபட்டு வருகிறது. காலநிலை மாற்றத்துக்கு இடையே மைதான நிலைமையும் மாறி வருகிறது. இதற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இன்றைய ஆட்டங்கள்
இரண்டு ஆட்டங்களும் : கச்சிபலி, ஹைதராபாத் / சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் ஒடிடி