games

img

விளையாட்டு...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனாக ரிஸ்வான்  முன்னாள் வீரர் கருத்து

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் வழி நடத்திச் சென்ற பாபர் அசாம், சில நாட்களுக்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில், அந்த இடத்திற்கு யாரை நிரப்புவார் கள் என்று பாகிஸ்தான் அணியினரும் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் புதிய கேப்ட னாக தேர்வு செய்யப்படுவார் என்றும், அவர் மட்டுமே அதற்கான வாய்ப்பில்  உள்ளார் என்றும் பாகிஸ்தான் முன் னாள் தொடக்க வீரர் முடாசர் நாசர் கூறியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரிஸ்வானை தவிர அனைவரையும் முயற்சி செய்துவிட் டது. ஒருவரும் அந்த பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இதனால் அவரை தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனாக்க முடியும்.  அவரை விட்டால் வேறு நபர் இல்லை. ரிஸ்வானை தேர்வு செய்யவே தேர்வுக்குழுவினர் கட்டாயப்படுத்தப்படுவர். இன்னொரு இளம் வீரரைத் தேர்வு செய்தால், பாபர் அசாமுக்கு ஏற் பட்டது போல் தான் இருக்கும். எனவே மூத்த வீரர் ஒருவருக்கு கேப்டன் பதவி வழங்கி அவர் தலைமையில் இளம் வீரர் ஒருவரை கேப்டன் பதவிக்கு தயார்ப்படுத்த வேண்டும். என்னைப் பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில் 3 வடிவங்களுக்குமே ரிஸ்வானைக் கேப்டனாக்கினால் நல்லது என்றுதான் நினைக்கிறேன் என்று  கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை தொடர்கள்: வெளியானது அறிவிப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.  2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப் படும் இந்த போட்டி அரசியல் பிரச்ச னை, பாதுகாப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்களால் சில முறை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு காரணமாக 2020 ஆம் ஆண்டு போட்டி நடத்தப்படவில்லை. கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி, வங்காளதேசத்தை கடைசி பந்தில் வீழ்த்தி வாகை சூடியது. ஆரம்பத்தில் ஆசிய கோப்பை தொடர் 50 ஓவர் வடிவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 20 ஓவர் வடிவம் புகுத்தப்பட்டது. அதாவது, அந்த சமயத்தில் எந்த உலக கோப்பை போட்டி நெருங்கி வருகிறதோ அதற்கு சிறந்த முறையில் தயாராகும் பொருட்டு அந்த வடிவில் நடத்தப் படுகிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்துகிறது. இந்த தொடர் டி20 வடிவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் ஆசிய  கோப்பையும் 20 ஓவர் வடிவில் அரங்கேறு கிறது. இதனைத் தொடர்ந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை எந்த நாடு நடத்தும் என்ற தகவலும் எந்த வடிவத்தில் நடக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.  அதன் விவரம்: 2025 - இந்தியா (டி20 ) 2027 -வங்கதேசம்  (ஒரு நாள்) 2029 - பாகிஸ்தான் (டி20) 2031 - இலங்கை (ஒரு நாள்)

கால்பந்து கவரப்பேட்டையில் தேசிய மகளிர் கால்பந்து போட்டி

சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை ஆர்எம்கே உண்டு உறைவிடப் பள்ளியில் சிபிஎஸ்இ தேசிய மகளிர் கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை (அக்.6) தொடங்கியது. இந்த போட்டி வரும் 9 ஆம் தேதி வரை  நடைபெறுகிறது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 9 மண்டலங்களின் 30 பள்ளிகளைச்  சேர்ந்த அணிகளும் மற்றும் துபாய் உள்ளிட்ட 3 வெளிநாடுகளைச் சேர்ந்த அணிகளும் கலந்து கொள்கின்றன. இந்த போட்டியை இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீராங்கனை ஷாலினி ஜெயராமன் தொடங்கி வைத்தார். சிபிஎஸ்இ சென்னை  மண்டல அலுவலர் தினேஷ் ராம், ஆர்.எம்.கே குழுமத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.முனிரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

எதிரணி வீரரைக் கடித்த கால்பந்து வீரருக்கு  ரூ.16 லட்சம் அபராதம்

இங்கிலாந்தில் பிரெஸ் டன்-பிளாக்பர்ன் அணிகள் இடையே உள்ளூர் கால்பந்து போட்டி நடை பெற்றது. இந்த போட்டியின் போது இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக எதிர் அணி வீரரை  மிலுடின் ஒஸ் மாஜி என்பவர் கடித்துள்ளார். இது குறித்து நடுவர் மாட்டோனோ ஹூவிடம் பெக் கூறிய போதிலும், கடித்த அந்த வீரரை வெளியேற்ற வில்லை. இதுகுறித்து நடந்த விசாரணையில், பிரெஸ்டன் வீரரான மிலுடின் ஒஸ்மாஜிக் கடந்த 22 ஆம் தேதி நடந்த ஆட்டத்தில், பிளாக்பர்ன் பின்கள வீரர் ஓவன் பெக்கை கடித்ததை ஒப்புக்கொண்டார். இதையெடுத்து, கால்பந்து வீரர் மிலுடின் 8 போட்டி களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும், அவருக்கு ரூ.16 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.