குகேஷ் - டிங் லிரென் ஆட்டத்தில் சூதாட்டம் இல்லை
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்று ஆட்டத்தில் தமிழ்நாட்டின் குகேஷ், சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். கடைசி சுற்று ஆட்டத்தில் டிங் லிரென் 55ஆவது நகர்வில் தவறு செய்தார். இந்த தவறு அவரது தரத்தி லான வீரருக்கு மிகவும் வேடிக்கையா னது. டிங் லிரெனின் தோல்வி சந் தேகத்தை ஏற்படுத்துகிறது என ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆண்ட்ரே பிலடோவ் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆண்ட்ரே பிலடோவின் குற்றச் சாட்டுக்கு டிங் லிரென் மறுப்பு தெரி வித்துள்ளார். இதனால் செஸ் விளை யாட்டில் சூதாட்டம் செய்ய முடியுமா? என்ற கேள்விகள் பலமாக கிளம்பி யுள்ளன. குகேஷிற்கு 18 வயது தான் ஆகிறது. அவர் ஒரு பள்ளி மாணவன் தான். படிப்பு, எதிர்காலம் என எல்லா வற்றையும் புறந்தள்ளி செஸ் விளை யாட்டே கதி என கிடப்பவர். உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கு மிக கடினமாக பயிற்சி பெற்றவர். மேலும் குறுக்கு வழியில் வெற்றி பெறவோ, புரோக்கர்களை தொடர்பு கொள்ளும் அளவிற்கு வயதும், தைரியமும் கிடை யாது ; அவருக்கு இதெல்லாம் தெரிய வும் வாய்ப்பில்லை. அதே போல முன்னாள் சாம்பிய னான டிங் லிரென் எளிதில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லா தவர்; கடினமான போராட்ட குணமிக்க வர். செஸ் சாம்பியன்ஷிப் போட்டி யின் இறுதிச் சுற்றில் மீண்டும் கள மிறங்குவதற்காக கடினமாக போராடி யவர். கார்ல்சென் போல பல்வேறு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லவும், கார்ல்சென் சாதனையை தகர்க்கவும் கடினமான பயிற்சியுடன் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் களமிறங்கி னார். சீனர்களுக்கு சூதாட்டம் பிடிக்காது முக்கியமாக குகேஷ் - டிங் லிரென் ஆகிய இருவரும் வசதிபடைத்த வர்கள். பணத்திற்காக டிங் லிரென் சூதாட்டத்தில் ஈடுபட 1% வாய்ப்பில்லை குறிப்பாக சீனர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஊக்கமருந்து சோதனை யில் கூட சிக்க மாட்டார்கள் என்ற சூழ் நிலையில், விளையாட்டு சூதாட்டங் களில் சீனர்கள் ஈடுபாடு இல்லா தவர்கள். குறுக்கு வழியில் (டெக்கினிக் கல்) விளையாட முயற்சிப்பார்கள். ஆனால் சீனர்கள் சூதாட்டங்களில் ஈடு பட மாட்டார்கள். இது உலகம் அறிந்த விஷயம் ஆகும். சீனர்களின் விளை யாட்டு மனநிலை இப்படி இருக்கை யில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்று ஆட்டத்தில் சூதாட்டம் நிகழ வாய்ப்பில்லை. தவறான நகர்த்த லால் தான் சந்தேகம் கிளம்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செஸ் விளையாட்டில் சூதாட்டம் செய்ய முடியுமா? செஸ் என்பது தனிநபர் நகர்த்தல் சார்ந்த விளையாட்டு என்பதால் வெற்றி, தோல்விகள் தொடர்பாக சந்தேகம் கிளம்புவது வாடிக்கையானது தான். இதுவரை செஸ் விளையாட்டில் சூதாட்டம் தொடர்பான சர்ச்சைகள் வெளிவரவில்லை என்றாலும், உண்மையில் செஸ் விளையாட்டில் சூதாட்டம் செய்ய வாய்ப்புள்ளது. தனி நபர் சிந்திப்பின் பின்னணியில் சுதந்திர மான நகர்த்தல் முறைகள் இருப்பதால் சூதாட்டம் நிகழ 75% வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்வின் விடைபெற நான் அனுமதித்திருக்க மாட்டேன் : கபில் தேவ்
நான் அங்கு இருந்திருந்தால் அஸ்வின் இப்படி விடை பெற்று செல்ல அனுமதித்திருக்க மாட்டேன் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இந்திய கிரிக் கெட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் களில் ஒருவரான அஸ்வினின் ஓய்வு முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரது இந்த முடிவு ரசிகர்கள் மத்தி யில் பரவலாக ஏமாற்றத்தை தந்துள் ளது. அவரது முகத்தில் அந்த வேதனை யை நான் பார்த்தேன். அவர் மகிழ்ச்சி யாக இல்லை. அது வருத்தம் தான். அவருக்கு சொந்த மண்ணில் திருப்திகர மான பேர்வெல் போட்டியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அவர் கொஞ் சம் காத்திருந்து சொந்த மண்ணில் ஓய்வை அறிவித்திருக்கலாம். அது குறித்து நான் அறிய விரும்புகிறேன். அவருக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். தேசத்துக்காக 106 டெஸ்ட் போட்டி களில் விளையாடிய மகத்தான வீரர். இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்களிப்பை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. இந்தியாவின் மேட்ச் வின்னரான அவருக்கு பிசிசிஐ பெரிய அளவில் பேர்வெல் நடத்தும் என நான் நம்புகிறேன். நான் அங்கு இருந்திருந் தால் அவர் இப்படி விடைபெற்று செல்ல அனுமதித்திருக்க மாட்டேன். அஸ்வின் ஒரு சாம்பியன். அவர் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளார். அவ ருக்கு உலகின் அனைத்து மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என அவர் கூறினார்.