states

img

கோட்டா: ஜேஇஇ பயிற்சி பெற்று வந்த மாணவர் தற்கொலை!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஜே.இ.இ தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த பீகாரை சேர்ந்த ௧௬ வயதுடைய மாணவர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர், கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜே.இ.இ. தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். இவர் கடந்த 20-ஆம் அன்று நீண்ட நேரமாக தனது விடுதி அறைக் கதவை திறக்காததால், அவரது நண்பர்களும், விடுதியின் காவலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு விரைந்து, கதவை உடைத்துப் பார்த்தபோது மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் கோட்டாவில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி மேற்கொண்டு வந்த 17 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்; கடந்த 2023-ஆம் ஆண்டில் 26 மாணவர் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.