சாத்தூர், டிச.21- ‘கேரள இடது ஜன நாயக முன்னணி அரசைப் பாதுகாப்போம்; கேரளத் திற்கு துணை நிற்போம்’ என்ற முழக்கத்துடன், சாத்தூரில் ஒருமைப்பாட்டுக் கருத்த ரங்கம் நடைபெற்றது
சிஐடியு, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் ஆகிய அமைப் புகளின் சார்பில் தனியார் திரு மண மண்டபத்தில் நடை பெற்ற இந்நிகழ்விற்கு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ. விஜயமுருகன் தலைமை வகித்தார். விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம். சுந்தரபாண்டியன் வரவேற்பு ரையாற்றினார்.
சிஐடியு மாவட்டச் செய லாளர் பி.என். தேவா துவக்க வுரையாற்றினார். விதொச மாவட்டத் தலைவர் எஸ். பூங்கோதை, மாநிலப் பொரு ளாளர் பழனிசாமி, விவசாயி கள் சங்க மாவட்டச் செயலா ளர் வி. முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், விதொச அகில இந்திய இணைச்செய லாளருமான வி. சிவதாசன் சிறப்புரையாற்றினார். \
நிலக்குழு உறுப்பினர் கே. அர்ஜூனன், மாவட்டச் செயலாளர் ஆ. குருசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம். மகாலட்சுமி, மாவட்டப் பொருளாளர் வி.ஆர். செல்லச்சாமி, நிர்வாகிகள் கே. விஜயகுமார், எம்.சி. பாண்டியன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலை வர் கே. சுப்பாராஜ் ஆகி யோர் உட்பட பலர் பங்கேற்ற னர்.
விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ். மனோஜ்குமார் நன்றி கூறி னார்.
நெல்லுக்கு கொள்முதல் விலை கேரளத்தில் தான் அதிகம்!
விவசாயிகள் சங்க அகில இந்திய துணைத் தலைவர் டி. ரவீந்திரன் பேசுகையில், “கேரள இடது முன்னணி அரசானது மிக வும் திறம்பட செயல்பட்டு வருகிறது. லஞ்சம் பெறாத அமைச்சர் களை கொண்ட அரசாக திகழ்கிறது. கமிஷன் பெறாத எம்.பிக்கள் உள்ள கட்சி என்றால் அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். மேலும், உழைக்கும் மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாகும். விவசாயிகள் விளைவித்த ஒரு குவிண்டால் நெல்லுக்கு இந்தியாவிலேயே அதிகமாக ரூ. 2870 கொள்முதல் விலை வழங்குவது கேரள அரசுதான். அதேபோல் காய்கறி விலை திடீரென சரிந்தால், விவசாயிகளிடம் இருந்து உற்பத்திச் செலவுடன் 20 சதவிகிதம் கூடுதல் தொகைக்கு அரசே கொள்முதல் செய்கிறது. இந்த அரசின் நல்ல செயல்பாடு களுக்கு கேடு விளைவிக்கும் வேலையை ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது. எனவே, கேரள அரசுடன் துணை நிற்போம்” என தெரிவித்தார்.
வீடுகட்ட 10 சென்ட் நிலம் வழங்கும் கேரள அரசு
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந் திய துணைத் தலைவர் ஏ. லாசர் பேசுகையில், “மக்க ளுக்கு கொடுத்த தேர்தல் வாக்கு றுதிகளை நிறைவேற்றி வரும் அரசாக கேரள இடது முன்னணி அரசு உள்ளது. இந்த அரசை உலக அளவில் பல பொருளா தார வல்லுநர்கள் பாராட்டி வரு கின்றனர். 1957-இல் தோழர் இஎம்எஸ் தலைமையிலான அரசு, கேரளத்தில் ஆட்சிக்கு வந்தது. அப்போது ஏழை மக் கள் வீடு கட்டிக் கொள்ள 5 சென்ட் நிலத்தை வழங்கியது. தற்போதைய அரசு 10 சென்ட் நிலம் வரை வழங்கி வருகிறது. 100 நாள் வேலைத் திட்டம் ஊழல் இன்றி நடைபெறுகிறது. இத்திட்டத்தில் தொழிலாளர் களுக்கு கூலியை முழுமையாக வழங்கி வருகிறது. தீண்டாமை கொடுமைகள் இல்லாத மாநில மாக கேரள மாநிலம் திகழ் கிறது என தெரிவித்தார்.