கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறையையொட்டி, விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக விமானங்களில் முன்பதிவு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்கு செல்லக்கூடிய உள்நாட்டு விமானங்கள் கட்டணங்களும், சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய் ஆகிய சர்வதேச விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னை - மதுரை இடையே வழக்கமாக ரூ.4,300 ஆக இருந்த விமான கட்டணம் ரூ.17,695 ஆகவும், சென்னை - திருச்சி விமான கட்டணம் ரூ.2,382இல் இருந்து ரூ.14,387 ஆகவும், சென்னை - தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.4,796-இல் இருந்து ரூ.14,281 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை - தாய்லாந்து இடையே வழக்கமாக ரூ.8,891 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.17,437 ஆகவும், சென்னை - துபாய் இடையே வழக்கமாக ரூ.12,871 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.26,752 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.