பெங்களூரு,டிசம்பர்.21- முன்னள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(EPF) மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பெங்களூரு வருங்கால வைப்பு நிதி ஆணையர் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.
ராபின் உத்தப்பா இயக்குநராக உள்ள நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ரூ.23 லட்சத்தை வைப்பு வைக்கவில்லை என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.