games

img

விளையாட்டு...

அஸ்வின் ஓய்வும்... சர்ச்சைகளும்...

கிரிக்கெட் உலகின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரும், ஆல் ரவுண்டருமான தமிழ்நாட்டின் ரவிச் சந்திரன் அஸ்வின்(38) ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 2 நாட்களுக்கு முன்பு பிரிஸ் பேன் டெஸ்ட் போட்டியின் பொழுது அறிவித்தார். நல்ல பார்மில் இருந்தும், வாய்ப்பு கிடைக்கும் காலத்தில் அரு மையாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய அஸ்வின் ஓய்வு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. கம்பீர் மீது சந்தேகம் சமீபத்தில் நடைபெற்ற நியூஸி லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொட ரில் அஸ்வின் மிக அருமையாக பந்து வீசி 8 விக்கெட் மேல் சாய்த்தார். ஆனால் திடீரென பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி  முடிந்த பின்பு ஓய்வு அறிவித்துள்ளது விமர்சனப் பொருளாக உருவெடுத்துள் ளது. அஸ்வினின் ஓய்வுக்கு கம்பீர் தான் காரணம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் மிக அருமையாக விளையாடிய அஸ்வின், ஆஸ்தி ரேலிய அணிக்கெதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தேர்ந் தெடுக்கப்பட்டார். சூப்பர் பார்மில் இருந்தும் முதல் டெஸ்ட் போட்டி யின் ஆடும் லெவனில் இருந்து புறக் கணிக்கப்பட்டார். தொடர்ந்து அடி லெய்டு நகரில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அடிலெய்டு மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால், அஸ்வினின் பந்துவீச்சு சரியாக எடுபடவில்லை. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டவுடன், தோல்விக்கு அஸ்வின் தான் காரணம் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு, அவரை பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி யில் இருந்து நீக்கினார் கம்பீர். மற்ற சீனியர் வீரர்கள் நன்றாக விளையாடா விட்டாலும் அணியில் தொடர்ந்து நீடிக்கும் பொழுது தனக்கு மட்டும் ஏன் இந்த “உள்ளே - வெளியே” நிலைமை என கடுப்படைந்த அஸ்வின் ஓய்வை அறிவித்து இருக்கலாம் என சந்தே கிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தத்தில் அஸ்வின் ஓய்வு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-பாகிஸ்தானுக்குச் செல்லாது பாகிஸ்தான்-இந்தியாவில் விளையாடாது - ஐசிசி

2025ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பாகிஸ்தான் நாட்டில் நடை பெறுகிறது. வழக்கம் போல பாது காப்புப் பிரச்சனையை காரணம் காட்டி, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க மாட்டோம் என்றும், பாகிஸ்தானை தவிர்த்து வேறு நாட்டில் நடத்த வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இத னை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்,”சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தான் மண்ணில் விளை யாடவில்லை என்றால், நாங்களும் இந்தியாவிற்கு சென்று கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டோம்” என அறிவித்தது. இதனால் தங்களுக்கு ஹைபிரிட் முறைப்படி போட்டியை நடத்த வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்தது. முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரி யம் தற்போது அதனை ஏற்றுக் கொண்டி ருக்கிறது. மாறாக தாங்களும் பதி லுக்கு இனி இந்தியா வந்து எந்த ஒரு தொடரிலும் விளையாட மாட்டோம் என்றும் இனி ஹைபிரிட் மாடல் படி தான் நாங்களும் விளையாடுவோம் என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. பாகிஸ்தானின் இந்த முடிவு இந்தியா வுக்கும் பிரச்சனையை கிளப்பியது.  இந்நிலையில், இரண்டு நாடு கிரிக்கெட் வாரியங்களும் ஐசிசி உடன்  ஆலோசனை நடத்தியதில் இறுதி முடிவு எட்டப்பட்டு விட்டது. அதில் சாம்பி யன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி ஹைபிரிட் மாடல் முறைப்படி பங்கேற்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2024-ஆம் ஆண்டிலிருந்து 2027-ஆம்  ஆண்டு வரை இந்தியாவும் பாகிஸ்தா னும் இணைந்து நடத்தும் தொடரில் இரு அணிகளும் ஹைபிரிட் மாடல் முறைப் படி தான் விளையாடப் போகிறது. அதாவது 2025 மகளிர் உலகக்கோப்பை 2026 டி-20 உலகக்கோப்பை ஆகிய தொடரை இந்தியா நடத்தப் போகி றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி ஹைபிரிட் மாடல் முறைப்படி தான் விளையாடும் என அறிவிக்கப் பட்டிருக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே முத்தரப்பு தொடர் இதன் மூலம் இரு அணிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தீர்வுக்கு வந்துள்ளது. மேலும் இந்தியா பாகிஸ் தான் மற்றும் மேலும் ஒரு அணி இணைந்து முத்தரப்பு தொடரையும் நடத்த ஐசிசி கேட்டுக் கொண்டி ருக்கிறது. இதற்கும் ஒப்புதல் வழங்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது. இந்த தொடரும் ஹைபிரிட் மாடல் முறைப்படி தான் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.