அடிலெய்டு டென்னிஸ் 2024 : இறுதியில் பெலிக்ஸ்
5ஆவது அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர், ஆஸ்திரே லிய நாட்டின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற ஆடவர் ஒற்றை யர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் டாமி பவுல், தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள கனடாவின் பெலிக்ஸை எதிர்கொண் டார். இந்த ஆட்டத்தில் டாமி பவுல் எளி தாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெலிக்ஸ் 7-6 (7-3), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறினார். அமெரிக்கா வின் டாமி பவுல் அதிர்ச்சி தோல்வி யுடன் தொடரில் இருந்து வெளியேறி னார். பெகுலா அபாரம் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை யிறுதி ஆட்டத்தில் போட்டித் தரவரிசை யில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா வின் பெகுலா, தரவரிசையில் இல்லாத கஜகஸ்தான் வீராங்கனை யூலாவை 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத வீராங்கனைகளான அமெரிக்காவின் கீஸ், ரஷ்யாவின் சம்சோனோவா ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத் தில் 5-7, 7-5, 3-0 என்ற புள்ளிக்கணக்கில் கீஸ் முன்னிலையில் இருந்த நிலை யில், காயம் காரணமாக சம்சோ னோவா வெளியேறினார். அதிர்ஷ்ட வாய்ப்புடன் அமெரிக்காவின் கீஸ் இறுதிக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் பெகுலா - கீஸ் இந்திய நேரப்படி சனியன்று காலை 11 அணி அளவில் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக தோனி மீண்டும் நியமனம்?
சாம்பியன் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் நட்சத்திரம் தோனி அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. சாம்பியன் டிராபி தொடருக்கு அணிகளை அறிவிக்க ஜனவரி 12ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இந்திய தேர்வு குழு அணி வீரர்களின் விபரத்தை அறி விக்க உள்ளது. கவுதம் கம்பீர் புதிய தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்ற பின்னர் இந்திய அணி சற்று பின்னடை வை சந்தித்து வருகிறது. இதனால் தோனியை மீண்டும் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு நடை பெற்ற டி-20 உலகக்கோப்பை தொட ரின் போது ரவி சாஸ்திரி பயிற்சியாள ராக இருக்கும்போது தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதேபோல் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக டோனி மீண்டும் ஆலோசகராக பதவி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் தோனியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கோலிக்கு நவ்ஜோத் சிங் சித்து ஆதரவு
ஆஸ்திரேலியாவில் நடை பெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தாலும் அடுத்த 4 டெஸ்ட் போட்டியிலும் சொதப்பி னார். கோலி தன் மனைவியுடன் (நடிகை அனுஷ்கா சர்மா) அதிக நேரம் செலவிடுவதால் கிரிக்கெட்டை மறந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கண்டனம் தெரிவித்துள்ளார். விராட் கோலிக்கு விமர்சனங் களை எதிர்கொள்வது இது முதல் முறை கிடையாது. ஆனால் சில ரசிகர்கள் விராட் கோலியின் மனைவி யை தேவையில்லாமல் இழுத்து விமர்சனம் செய்கிறார்கள். அது மிகவும் தவறு. நமது வீரர்களை நாம் மதிக்க வேண்டும். பொறுமையாக இருங்கள். அனைவருமே கடின காலத்தை சந்திப்பார்கள். ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர் தன்னுடைய உடல் தகுதியை மேம்படுத்த வேண்டும். வேறொன்று மில்லை” என அவர் கூறினார்.