games

img

ஓய்வை அறிவித்தார் புஜாரா!

இந்திய டெஸ்ட் அணியின் நம்பத்தகுந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான  சேதேஸ்வர் புஜாரா, அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
1914-ஆம் ஆண்டு டெஸ்ட் அறிமுகமான பிறகு, புஜாரா இந்திய அணியின் மூன்றாவது நிலை பேட்டிங்கில் “சுவர்” போன்று பல வருடங்கள் திகழ்ந்தார்.
சமூக வலைதளத்தில் உணர்ச்சி பூர்வமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார்,
“இந்திய அணிக்காக விளையாடிய ஒவ்வொரு தருணமும் எனக்கு பெருமை. தேசிய ஜெர்ஸி அணிந்து கீதம் பாடிய அனுபவம் சொல்லிக்கொள்ள முடியாத ஒன்று. எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. எனவே மிகுந்த நன்றியுடனும் மன நிறைவுடனும் அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுகிறேன். என்னை ஆதரித்த ரசிகர்கள், குடும்பம், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புஜாரா, மொத்தம் 7,195 ரன்கள் எடுத்தார். அதில் 19 சதங்கள் மற்றும் 35 அரையசதங்கள் அடங்கும். 
2018–19 ஆஸ்திரேலியா தொடரில் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி கிடைக்க முக்கிய பங்கு வகித்தார். டிராவிட்டுக்கு அடுத்து 'இந்தியாவின் சுவர்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர்.
இவர் இறுதியாக 2023 ஜூன் மாதம் லண்டனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார்.