இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பு?
10ஆவது சீசன் டி-20 உலகக் கோப்பை தொடரில், இந்தி யாவுடன் இணைந்து போட்டியை நடத்திய இலங்கை அணி சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது. அதாவது சாம்பியன் அணிகளில் ஒன்றான இலங்கை விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் (சூப்பர் 8 மட்டும்) தோல்வியடைந்து வெளியேறியது. இந்த தோல்வி காரணமாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்ய அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இலங்கை விளை யாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே கூறுகையில்,”டி-20 உலகக்கோப்பையில் இலங்கை அணியின் படுதோல்வியானது, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் ஒரு முழுமையான மாற்றத்தைத் தூண்ட க்கூடும். கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு இடைக்காலக் குழுவை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வரு கிறோம்” என அவர் கூறினார். அதாவது இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைப்பது போன்ற அறிவிப்பை சுனில் குமார கமகே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பையில் இருந்து பிரேசில் நட்சத்திர வீரர் ரோட்ரிகோ விலகல்
பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், ரியல் மாட்ரிட் (ஸ்பெயின் கிளப்) அணிக் காக விளையாடிவருபவருமான ரோட்ரிகோ வலது முழங்காலில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காரணமாக எஞ்சிய கிளப் போட்டிகளிலும், வர விருக்கும் உலகக்கோப்பை தொடரி லும் விளையாடமாட்டார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘விங்கர்’ என அழைக்கப்படும் தாக்குதல் பிரிவு ஆட்டக்காரரான ரோட்ரிகோ மார்ச் 2 அன்று கெட்டாபே (ஸ்பெயின்) அணிக்கு எதிரான ஆட்டத்தில் மாற்று வீரராக களம் இறங்கியபோது காயமடைந்தார். இது தொடர்பாக ரோட்ரிகோ கூறுகையில், “இது என் வாழ்வின் மோசமான நாட் களில் ஒன்று. கிளப் போட்டிகள் மற்றும் எனது நாட்டின் உலகக்கோப்பை கனவு என இரண்டில் இருந்தும் நான் விலக நேரிட்டுள்ளது” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். பிரேசில் நாட்டின் நட்சத்திர வீரர் நெய்மர் காயத்தில் இருந்து மீண்டுள்ளார். இதனால் வரவிருக்கும் உலகக்கோப்பையில் பிரேசில் வலு வான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில், ரோட்ரிகோ காயம் காரண மாக திடீரென விலகியது பிரேசில் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய சீனியர் பெடரேசன் கபடி தொடருக்கான பயிற்சி முகாம் ஆடவருக்கு உசிலம்பட்டி ; மகளிருக்கு தேக்கம்பட்டி
5ஆவது தேசிய சீனியர் பெட ரேசன் கபடி போட்டிகள் மத்தியப்பிரதேச மாநி லத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்துகொள்ளும் தமிழ் நாடு அணியின் பயிற்சி முகாம் தொடர் பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேக்கம்பட்டி அதன்படி தமிழ்நாடு கபடி சம்மே ளனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய சீனியர் பெடரேசன் கபடி தொடருக்கான மகளிர் அணியின் பயிற்சி முகாம் மார்ச் 9ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப் பாளையம் தேக்கம்பட்டியில் தொடங்குகிறது. மார்ச் 16 வரை நடைபெற உள்ள இந்த பயிற்சி முகா மில் தேசிய சீனியர் பெடரேசன் கோப்பைக்கு தேர்வு செய்ய வீராங் கனைகளை மாவட்ட செயலாளர்கள் உரிய நேரத்தில் பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவித்துள்ளது. வீராங்கனைகள் தேர்வு பயிற்சி முகாமிற்கு பின்பு தான் அறிவிக்கப்படும். உசிலம்பட்டி அதே போல ஆடவர் அணியின் பயிற்சி முகாம் மார்ச் 6ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம் பட்டி பிஎம்டி கல்லூரியில் நடைபெற உள்ளது. மார்ச் 16 வரை பயிற்சி முகாம் நடைபெறுகிறது. ஆடவர் பிரிவு கபடி தொடரும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் தான் நடைபெறுகிறது. ஆனால் ஆடவர் பிரிவில் பயிற்சி முகாமிற்கு முன்பே தேசிய சீனியர் பெடரேசன் கோப்பையில் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியல் வெளி யாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
