games

img

விளையாட்டு

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிக்கு முன்னேறுமா தென் ஆப்பிரிக்கா?

இந்தியா - இலங்கை நாடுகளில் கூட்டாக நடைபெற்று வந்த 10ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து நாடுகள் அரையிறுதிக்கு முன்னேறின.  இந்நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் புதனன்று தொடங்குகிறது. முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இரு அணிகளும் உலகக்கோப்பை வெல்லும் முனைப்பில் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவதால் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் அரையிறுதி ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நூலிழையில் சாம்பியன் பட்டத்தை இந்தியாவிடம் இழந்தது.

தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து

நேரம்: இரவு 7:00 மணி இடம்: கொல்கத்தா, மேற்கு வங்கம் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)

பாகிஸ்தான் அணி வெளியேறிவிட்டதால் இனி இந்தியாவில் மட்டுமே டி-20 உலகக்கோப்ப  ஆட்டங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில் சிக்கி தவித்த பி.வி.சிந்து பெங்களூரு திரும்பினார்

அமெரிக்கா மற்றும் இஸ் ரேல் நாடுகள், ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, மார்ச் 1 அன்று ஈரான் ராணுவம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளின் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது.  இந்த தாக்குதலில் உலகின் பரபரப் பான விமான நிலையங்களுள் ஒன்றான துபாய் விமான நிலையத்தின் ஒரு பகுதி முற்றிலும் சேதமடைந்துள் ளது. இதில் விமான நிலைய ஊழி யர்கள் 4 பேர் காயமடைந்ததாகத் தக வல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 1 அன்று துபாய் விமான நிலையத்தில் இருந்த இந்தியாவின் நட்சத்திர பேட் மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் அவரது பயிற்சியாளர் ஈரான்  ராணுவ தாக்குதலில் இருந்து நூலி ழையில் உயிர் தப்பினர். தொடர்ந்து இந்திய தூதரக உதவியுடன் பி.வி. சிந்து துபாய் விமான நிலையத்தி லேயே 2 நாட்கள் தங்கியிருந்த நிலை யில், செவ்வாயன்று அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு திரும்பினார். பெங்களூரு வந்துவிட்டதை உறுதி செய்த பி.வி.சிந்து தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில்,”பாதுகாப்பாக பெங்களூரு திரும்பினேன். கடந்த சில நாட்கள் மிகவும் பதற்றமாகவும், நிச்சயமற்றதாகவும் இருந்தன” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
 

தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் மே.இ. தீவுகள்

டி-20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணி, சூப்பர் 8 சுற்றில் இந்தியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியது. எனினும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்  குழு இன்னும் தாய்நாடு திரும்ப முடியாமல் கடந்த 2 நாட்கள் இந்தியாவிலேயே தவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அந்நாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் சர்வதேச வான்வெளி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தாய்நாடு  திரும்புவது தாமதமாகியுள்ளது. வீரர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய சர்வதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்” என அவர் கூறினார்.