டெஸ்ட், ஒருநாள் என இரண்டு விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது ஆஸ்திரேலியா. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்க்ஸ் வெற்றியை ருசித்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி காலேவில் பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்திலும் தொடக்கம் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இலங்கை மண்ணில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. கடைசியாக 14 ஆண்டுகளுக்கு முன் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த 2011இல் 1-0 என்ற கணக்கில் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்து. (ஸ்கோர் கார்டு : இலங்கை 257 & 231 - ஆஸ்திரேலியா 414 & 75/1)