games

img

இந்திய அணியினர் தீவிர வலைப் பயிற்சி!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக துபாய் சென்றுள்ள இந்திய அணியினர் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

8 அணிகள் இடையிலான 9ஆவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

அந்த வகையில், நாளை மறுநாள் (பிப்.19) கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. வருகின்ற 20ஆம் தேதி, இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியினர் நேற்று முன்தினம்(பிப்.15) துபாய் வந்து சேர்ந்த நிலையில், நேற்று(பிப்.16) முதல் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.