147 ஆண்டுக்குப் பின் இந்திய அணி ஒயிட் வாஷ் டெஸ்ட் கோப்பையை வென்றது நியூஸிலாந்து
3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்தியா விற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், புனே வில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை ருசித்து தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நவம்பர் 1 அன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய நியூ ஸிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் ஜடேஜா (5 விக்கெட்டுகள்) - வாஷிங்டன் சுந்தர் (4 விக்கெட்டுகள்) ஜோடியின் சுழற்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 65.4 ஓவர்களில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸி லாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மிட்சல் 82 ரன்கள் குவித்தார். இந்திய அணியும் திணறல் பின்னர் தனது முதல் இன்னிக்ஸை தொடங்கிய இந்திய அணி நிதான வேகத்தில் ரன் குவித்து 59.4 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சப்மன் கில் 90 ரன்கள் விளாசினார். அதேபோல நியூஸிலாந்து அணி தரப்பில் அதிகபட்ச மாக அஜாஜ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 28 ரன்கள் பின்னிலையுடன் இரண் டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூ ஸிலாந்து அணி ஜடேஜா (5 விக்கெட்டு கள்) - அஸ்வின் (3 விக்கெட்டுகள்) சூழ லை சமாளிக்க முடியாமல் 45.3 ஓவர் களில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இந்திய அணியின் வெற்றிக்கு 147 ரன்கள் நிர்ணயம் செய்தது. அஜாஜ் படேல் அபாரம் எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வழக்கம் போல அஜாஜ் (6 விக்கெட்டுகள்) - பிலிப்ஸ் (3 விக்கெட்டுகள்) சுழற்பந்து வீச்சு கூட்டணியிடம் கடுமையாக திணறியது. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மட்டும் வெற்றிக்காக போராட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த னர். குறிப்பாக ரிஷப் பண்ட் (64), வாஷிங்டன் சுந்தர் (12), ரோகித் (11) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன் எடுத்தார். மற்ற 8 வீரர்களும் ஒற்றை இலக்கத்திலேயே ரன் எடுத்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 29.1 ஓவர்களில் 121 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் நியூஸி லாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் கோப்பை யை கைப்பற்றியது. ஆட்டநாயனாக அஜாஜ் படேலும், தொடர் நாயனாக வில் யங்கும் (இருவரும் நியூஸி லாந்து) வென்றனர். 147 ஆண்டுகால வரலாறு தகர்ந்தது டெஸ்ட் தொடரில் இதுவரை இந்திய அணி சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் (ஒரு தொடரின் அனைத்து போட்டிகளிலும் தோல்வி) ஆனது கிடையாது. இத்தகைய சூழலில் 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணியை, அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து புதிய வரலாறு படைத்துள்ளது நியூஸிலாந்து அணி. இது இந்திய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கம்பீரால் மிகப்பெரிய அவமானம்
ன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக முன்னாள் எம்.பி.யுமான கம்பீர், மோடி அரசின் ஆசீர்வாதத்துடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக சம்பீத்தில் பொறுப்பேற்றார். தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றவுடன் அணியில் சீர்திருத்தம் என்ற பெயரில் தனக்கு நெருக்கமான மற்றும் பிடித்தவர்களை அணிக்குள் கண்டு வந்தார். நல்ல பார்மில் இருந்தாலும் பிடிக்காதவர்களை அணியில் இருந்து நீக்கினார். மேலும் தான் பணியாற்றிய கொல்கத்தா ஐபிஎல் அணியில் விளையாடிய நபர்கள் மற்றும் பயிற்சியாளர்களை (மோர்னே மார்க்கல்) அணிக்குள் கொண்டு வந்தார். இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் கம்பீரின் முடிவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கையுடன் கண்டனம் தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையை கம்பீர் கண்டுகொள்ளாத நிலையில், நியூஸிலாந்து அணியிடம் 147 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவில் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகி, மிகப்பெரிய அவமானத்தை சந்தித்துள்ளது.
புரோ கபடி 2024
இன்றைய ஆட்டங்கள்
இரண்டு ஆட்டங்களும்: கச்சிபலி, ஹைதராபாத்
புனே - குஜராத்
நேரம் : இரவு 8 மணி
தமிழ் தலைவாஸ் - பெங்களூரு
நேரம் : இரவு 9 மணி