இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையும், சாய்னா நேவால் போட்டித் பேட்மிண்டனிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், “என்னால் இனி போட்டித் தரத்தில் விளையாட முடியவில்லை. உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனது பயணம் இங்கே நிறைவடைகிறது” என சாய்னா கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள சாய்னா நேவால், 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் பேட்மிண்டன் வீராங்கனையாக சாதனை படைத்தவர். மேலும், உலக தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த முதல் இந்திய பெண் வீராங்கனையாகவும் அவர் பெயர் பெற்றுள்ளார்.
பல்வேறு விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும் சாய்னாவின் சாதனைகளை நினைவுகூர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
