games

img

விளையாட்டு செய்திகள்

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் - 2024

அதிர்ஷ்ட வாய்ப்புடன் “சூப்பர் 8”  சுற்றுக்குத் தகுதி பெற்ற இங்கிலாந்து

மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா நாடுகளில்  கூட்டாக நடைபெற்று வரும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரில் தற்போது லீக் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஞாயிறன்று நடை பெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்தி ரேலியா - ஸ்காட்லாந்து (“குரூப் பி”) அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி  பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்  பிற்கு 180 ரன்கள் எடுத்தது. 181  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்தி ரேலிய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 

ஆஸ்திரேலிய அணியின் வெற்றி யால் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி அதிர்ஷ்ட வாய்ப்புடன் “சூப்பர் 8” சுற்றுக்கு தகுதி பெற்றது. காரணம் “குரூப் பி” பிரிவின்  புள்ளிப்பட்டியலில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் 5 புள்ளிகளுடன் சரிசமமாக இருந்தாலும், ரன்ரேட் அடி ப்படையில் முன்னிலையில் இருந்த தால் ஸ்காட்லாந்து (ரன்ரேட் : +1.255) அணியை பின்னுக்குத்தள்ளி இங்கி லாந்து (ரன்ரேட் : +3.611) “சூப்பர் 8” சுற்றுக்கு முன்னேறியது என்பது குறிப் பிடத்தக்கது.

இன்றைய ஆட்டங்கள்

இலங்கை - நெதர்லாந்து
இடம் : லூசியா, மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6 மணி

நியூஸிலாந்து - பப்புவா நியூ கினியா
இடம் :  டிரினிடாட், மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : இரவு 8 மணி

ஐரோப்பிய கோப்பை கால்பந்து - 2024
இத்தாலி அபார வெற்றி

“மினி கால்பந்து உலகக்கோப்பை” என அழைக்கப்படும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான யூரோ கோப்பை கால்பந்து தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஞாயிறன்று அதிகாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இத்தாலி - அல்பேனியா (“குரூப் பி”) அணிகள் மோதின. இளம் அணியான அல்பேனியா முதல் நிமிடத்திலேயே கோலடிக்க, இத்தாலி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதன்பிறகு ஆக்ரோஷமான ஆட்டத்தை கையிலெடுத்த இத்தாலி அணி அடுத்த 16 நிமிடத்திற்குள் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து மிரட்டியது. தொடர்ந்து இத்தாலி அணி தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்திய நிலையில், அல்பேனியா அணி வீரர்கள் இத்தாலி அணியின் தடுப்புச் சுவரை தகர்க்க முடியாமல் திணறினர். இறுதியில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டங்கள்

ருமேனியா - உக்ரைன்
நேரம் : மாலை 6:30 மணி
இடம் : மூனிச், ஜெர்மனி

பெல்ஜியம்- ஸ்லோவேக்கியா
நேரம் : இரவு 9:30 மணி
இடம் : பிராங்க்புருட், ஜெர்மனி

ஆஸ்திரியா - பிரான்ஸ்
நேரம் : நள்ளிரவு 12:30 மணி
இடம் : டசல்டார்ப், ஜெர்மனி