games

img

விளையாட்டு...

தரவரிசை இல்லாமல் விம்பிள்டனை மிரட்டும் சுவிட்டோலினா

நீண்ட காலத்திற்கு பிறகு சூப்பர் பார்மில் களமிறங்கி யுள்ள உக்ரைனின் சுவிட்டோலினா நடப்பு சீசன் விம்பிள்டன் தொடரில் முரட்டுத்தனமாக விளையாடிவருகிறார். முதல் சுற்றில் 5 முறை விம்பிள்டன் சாம்பியனான வீனஸ்  வில்லியம்ஸையும், 2-வது சுற்றில் முன்னணி வீராங்கனை யான பெல்ஜியத்தின் மார்டென்ஸையும், 3-வது மற்றும் 4-வது சுற்றில் அதிரடிக்கு பெயர் பெற்ற அமெரிக்காவின் கெனின் மற்றும் அசரென்காவையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், காலிறுதியில் டென்னிஸ் உலகின் முன்னணி வீராங்கனையான போலந்தின் ஸ்வியாடெக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.  தற்போதைய சூழ்நிலையில் சுவிட்டோலினா எதிர்த்து விளையாடவே எதிர் வீராங்கனைகள் சற்று தயக்கத்துடன் உள்ளனர். அந்தளவுக்கு தனது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் நடப்பு சீசன் விம்பிள்டன் தொடரை கலங்கடித்து வரும் நிலையில், வெள்ளியன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் மார்கெட்டாவை எதிர்கொள்கிறார் சுவிட்டோலினா. இடதுகை வீராங்கனையான மார்கெட்டா 2019 பிரெஞ்சு ஓபனில் யாரும் எதிர்பாராத வகையில் இறுதிக்கு முன்னேறி அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - மேற்கு இந்திய தீவுகள்
(முதல் டெஸ்ட்- 2ஆம் நாள்)
நேரம் : இரவு 7:30 மணி 
இடம் : வின்ட்சோர் பார்க், டோம்னிகா
சேனல் : தூர்தர்சன் (அனைத்து மொழிகளிலும்), 
ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)

விம்பிள்டனில் இன்று 
ஆடவர் ஒற்றையர் - விடுமுறை
மகளிர் ஒற்றையர் - அரையிறுதி
ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர் பிரிவுகளில் அரையிறுதி ஆட்டங்களும், கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டமும் நடைபெற உள்ளன.

வரலாறு படைத்த இலங்கை மகளிர் அணி

ஒருநாள் மற்றும் டி20 போட்டி களில் விளையாடுவதற்காக நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பய ணத்தின் தொடக்க நிகழ்வான 3 போட்டி  களை கொண்ட டி-20 தொடரின் முதல் 2  போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய  நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி கொழும்புவில் வியாழனன்று நடைபெற்றது.  டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், நியூசிலாந்து அணி 20 ஓவர்  முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு  140 ரன்கள் எடுத்தது. 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் (மகளிர் பிரிவில்) களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷாமரி  (80), ஹர்சிதா (49) ருத்ரதாண்டவ மாடினர். கிட்டத்தட்ட வெறும் 14.3 ஓவரில் வெற்றி இலக்கை (143 ரன்கள்) எளிதாக எட்டி 10 விக்கெட் வித்தி யாசத்தில் அபார வெற்றியை ருசித்தது  மட்டுமல்லாமல், டி-20 போட்டி வர லாற்றில் முதன் முறையாக நியூசி லாந்து அணியை வீழ்த்தி வரலாறும் படைத்தது இலங்கை மகளிர் அணி.

டிரெண்டிங் வாய்ஸ்

நான் எடுத்த முடிவில் (அமெரிக்க மியாமி கிளப்பில் இணைவு) மகிழ்ச்சியடைகிறேன். புதிய சவாலை எதிர்கொள்ள தயாராகவும் ஆர்வமாகவும் இருக்கிறேன். எனது மனநிலையும் என் உறுதியும் எப்பொழுதும் மாறப்போவதில்லை, நான் எங்கிருந்தாலும், எனக்காகவும் அணிக்காகவும் அதிகபட்ச உழைப்பை கொடுக்க முயற்சிப்பேன், உயர்ந்த தரத்தில் தொடர்ந்து செயல்படுவேன்.