games

img

விராட் கோலி குறித்து தேவையில்லாத கருத்துக்கூறி சர்ச்சையில் சிக்கிய அப்ரிடி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி  தனி யார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,”விராட் கோலி  பார்மில் இருக்கும் போதே ஓய்வு பெற வேண்டும். பார்மில் இல்லாத போது அணியில் இருந்து நீக்கப்பட்டு ஓய்வு அறிவித்தால் அது நன்றாக இருக்காது.  புகழின் உச்சத்தில் இருக்கும் போதே இதை செய்தால் நல்லது. விராட் எதை செய்தாலும் ஸ்டைல் ஆக செய்  வார். அனேகமாக தனது கிரிக்கெட்  வாழ்க்கையை தொடங்கிய அதே முறை யில் இதையும் (ஓய்வை) செய்வார் என்று உணர்கிறேன்” எனக் கூறினார். விராட் கோலியின் பார்ம், ஓய்வு குறித்து அவரே இதுவரை எந்தக் கருத்தும் கூறாத நிலையில், அப்ரிடி தேவையில்லாமல் விராட் கோலியின் சொந்த விவகாரம் குறித்து கருத்து கூறியது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையாக  வெடித்துள்ளது.

கருத்துக்கூற உரிமை உண்டு : அதற்கு இப்படி கூறலாமா?

கிரிக்கெட் உலகில் எந்த கருத்தை யும் கூறலாம். கருத்துக் கூற எவ்வித தடையும் இல்லை. இதை தான் பேச வேண்டும், இதை பேசக்கூடாது என தனிப்பட்ட விதிகள் எதுவும் கிடையாது. தனிநபர் விளையாட்டுத் திறன் பற்றிக் கூட விமர்சிக்கலாம். ஆலோசனை கூற லாம். ஆனால் ஒரு வீரரின் ஓய்வு குறித்து பேச உரிமை கிடையாது. முக்கியமாக அவர்களின் ஓய்வை எதிர்பார்த்து பேசுவதே மிகவும் தவறான விஷயம். எந்த வீரர்களாக இருந்தாலும் களத்தில் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்பதே விளையாட்டு உலகம் ஆகும். ஆனால் வீரர் ஒருவர் ஓய்வுபெற்று விட்டால் நன்றாக இருக்கும், அவர்  அணியில் இல்லாவிட்டால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கூற உரிமை இல்லை. இதை தான் அப்ரிடி செய்து வீணாக வம்பில் மாட்டியுள்ளார். அப்ரிடி யின் கருத்துக்கு இந்திய ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் களமிறங்கியுள்ளதால் இந்த விவகாரம் பெரிதாக முளைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

;