games

img

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023

ஆஸ்திரேலிய கண்டத்தில் இன்று கோலாகல தொடக்கம்

விளையாட்டு உலகின் முக்கிய தொடர்களில் ஒன்றான மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 9-வது சீசன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் வியாழனன்று தொடங்கு கிறது. ஆக., 20 வரை நடைபெறும் இந்த தொடரில்  மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் நிலையில், தொடக்க ஆட்டத்தில் நார்வே - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரான ஆக்லாந்தில் நடைபெறுகிறது.  இந்த ஆட்டம் நிறைவு பெற்றபின் ஆஸ்திரேலியா - அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. 

அணிகள் - 32
ஓசியானியா - 2 (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து)
ஆசியா - 5 (சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, வியட்நாம்)
ஆப்பிரிக்கா - 4 (நைஜீரியா, மொரோக்கோ, தென் ஆப்பிரிக்கா, ஜாம்பியா)
வட அமெரிக்கா - 6 (அமெரிக்கா, கனடா, கோஸ்டாரிகா, ஹைதி, ஜமைக்கா, பனமா)
ஐரோப்பா - 12 (டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுக்கல், அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து) 
தென் அமெரிக்கா - 3 (அர்ஜெண்டினா, பிரேசில், கொலம்பியா)

மைதானங்கள்

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் 10 மைதானங்களில் (ஆஸ்திரேலியா - 6, நியூசிலாந்து 4) நடைபெறுகிறது. மைதானங்களுக்காக ஆஸ்திரேலிய, நியூசிலாந்து நாடு அரசுகள் சிறப்பு செலவுகள் மூலம் பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளன. நியூசிலாந்து நாடு ரக்பி மைதானங்களை கால்பந்து மைதானங்களாக மாற்றியுள்ளது.

1. ஸ்டேடியம் ஆஸ்திரேலியா - சிட்னி (ஆஸ்திரேலியா)
(75,784 பேர் அமரலாம்)
2.சிட்னி கால்பந்து - சிட்னி (ஆஸ்திரேலியா)
(40,583 பேர் அமரலாம்)
3. லாங் பார்க் - பிரிஸ்பேன் (ஆஸ்திரேலியா)
(49,461 பேர் அமரலாம்)
4. ரெக்டாங்குலர் - மெல்போர்ன் (ஆஸ்திரேலியா) 
(27,706 பேர் அமரலாம்)
5.ரெக்டாங்குலர் - பெர்த் (ஆஸ்திரேலியா)
(18,727 பேர் அமரலாம்)
6.ஹிண்ட்மார்ஷ், அடிலெய்டு (ஆஸ்திரேலியா)
(13,557 பேர் அமரலாம்)
7. ஈடன் பார்க், ஆக்லாந்து (நியூசிலாந்து)
(43,217 பேர் அமரலாம்)
8. ரெஜினல் மைதானம், வெல்லிங்டன் (நியூசிலாந்து)
(33,132 பேர் அமரலாம்)
9. போர்சித் பார் மைதானம், டுனேடின் (நியூசிலாந்து)
(25,947 பேர் அமரலாம்)
10. வைகட்டோ, ஹாமில்டன் (நியூசிலாந்து)
(18,009 பேர் அமரலாம்)

பரிசுத்தொகை

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.903 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.82 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.  2-ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.62 கோடி வழங்கப்பட உள்ளது. இதே  போல 3-ஆம் இடம், 4-வது இடம், அரையிறுதி, காலிறுதி வெளியேறிய ஒவ்வொரு அணிகளுக்கும் தரவரிசைக்கு தகுந்தாற்போல பரிசுத்தொகை உள்ளது.

(குறிப்பு : வீராங்கனைகளுக்கான தனி பரிசுத்தொகை சேர்த்து பரிசுத்தொகை கணக்கிடப்பட்டுள்ளது.)

துவக்க நாள் ஆட்டங்கள்

நார்வே - நியூசிலாந்து 
நேரம் : மதியம் 12:30 மணி
இடம் : ஈடன் பார்க், ஆக்லாந்து

ஆஸ்திரேலியா - அயர்லாந்து
நேரம் : மதியம் 3:30 மணி
இடம் : ஸ்டேடியம் ஆஸ்திரேலியா, சிட்னி
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு (ஒடிடி)


 

 

;