facebook-round

img

வெறுப்பின் நெருப்புக்கு எதிராய் தகிக்கும் மனித மாண்பு ! கே.பாலகிருஷ்ணன்

உ.பி., மாநிலத்தின் ஜான்ஸி நகரில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நேர்ந்த தீ விபத்தில், 10 குழந்தைகள் பலியான பேரவலம் ஒவ்வொரு இதயத்தையும் கனக்க வைக்கிறது. அந்த விபத்தில் தனது இரட்டைப் பெண் குழந்தைகளை பலிகொடுத் தார், 20 வயதே ஆன இளம் தந்தை யாகூப் மன்சூரி. சிறுவியாபாரியான அவர்‌ குடும்பத்துக்கு இது மிகப்பெரும் துயரம். ஆனால் அந்த நேரத்திலும் கூட,  தன் சொந்த துயரத்தைக் கடந்து -  எரிந்து கொண்டிருந்த தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிக்கியிருந்த 49  குழந்தைகளில் பலரை அவர் நெருப்பில் சிக்காமல் காப்பாற்றினார். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பாய்ந்து, தன்னால் முடிந்த அளவு குழந்தைகளை மீட்டெடுத்த அவரது துணிவு, மனிதநேயத்தின் உச்சக்கட்டம் ஆகும்.

இது வெறும் விபத்து அல்ல - யோகி யின் அரசின் தொடர்‌ கவனக் குறை வினால் ஏற்பட்ட பேரவலம். ஆனால் இத்தகைய கொடூர தருணங்களிலும் கூட, யாகூப் போன்ற சாதாரண மனி தர்களின் அசாதாரண தியாகங்கள், மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கான சான்றாக திகழ் கிறது.  அவரது இழப்பிற்கு எந்த ஈடும் இல்லை. பாசிச சக்திகளின் கொடுங் கரங்கள் சூழ்ந்திருக்கும் பின்னணி யில், யாகூப் மன்சூரி போன்றவர் களின் முன்னுதாரணங்கள் நமக்கு என்றும் நினைவில் நிற்கட்டும். வெறுப்பு அரசியலை வீழ்த்தி முன் னேறுவோம்‌. செய்தி Times Of India : பல குழந்தைகளை காப்பாற்றிய யாகூப் மன்சூரி, தன்னுடைய குழந்தைகளின் எரிந்த சடலங்களுடன் வருவதை படிக்கும்போது இதயம் கனத்துப் போகிறது.

- கே.பாலகிருஷ்ணன், 
சிபிஎம் மாநிலச் செயலாளர்