இராஜபாளையம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டியிடுவார் என்று அக்கட்சியினரும் கவுதமியும் தீவிர எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் அத்தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அங்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த சில வாரங்களாக இராஜபாளையத்தில் கவுதமி முகாமிட்டியிருந்தார். சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங்கை அழைத்து வந்து, ஊழியர் கூட்டமும் நடத்தினார்கள். அந்தக் கூட்டத்தில், இராஜபாளையம் தொகுதி பாஜக வெற்றிக்காக நீங்கள் கொலைகூட செய்வதற்கு தயங்கக்கூடாது என்றெல்லாம் முன்னாள் ராணுவத் தளபதி பாஜகவினருக்கு சிறந்த அறிவுரைகளை கூறிவிட்டுச் சென்றார். அவர்களும் கவுதமிக்காக இராஜபாளையத்தில் கொலைகளைச் செய்வதற்குக் கூட தயாராக இருந்தார்கள். கவுதமியின் துரதிருஷ்டம், அவரது அரசியல் கனவை, ராஜேந்திர பாலாஜியை வைத்து அதிமுக தகர்த்துவிட்டது.