உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கபில் சிபல்
இந்தியா ஜனநாயகத்தின் தாயகமாகத் திகழ்கிறது என பாஜக சொல்லளவில் மட்டுமே கூறுகிறது. ஆனால், நிஜத்தில் ஒன்றிய பாஜக அரசு சர்வாதிகாரத்தின் தந்தையாக இருக்கிறது. பாஜக இந்து - முஸ்லிம் பிரிவினைவாத கொள்கையை அமலாக்கி, தங்களது அரசியல் கணக்கை நடத்த விரும்புகிறது. இதன்மூலம், எதிர்க்கட்சிகளை வீழ்த்த துடிக்கிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் குமார் பன்சால்
நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். மோடி அரசு தனது அரசியல் எதிரிகளை நசுக்குவதற்காக அனைத்தையும் செய்து வருகிறது.
திரிணாமுல் மூத்த தலைவர் குணால் கோஷ்
முர்ஷிதாபாத் வன்முறைக்கு பின்னால் ஒரு பெரிய சதி உள்ளது. மத்திய நிறுவனத்தின் ஒரு பிரிவு, பிஎஸ்எப் ராணுவத்தின் ஒரு பிரிவு மற்றும் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முர்ஷிதாபாத் வன்முறை சதியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பிஎஸ்எப் ராணுவத்தினர் மேற்கு வங்கம் - வங்கதேச எல்லைப் பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ஜாமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் மௌலானா மக்மூத்
வக்பு திருத்தம் சட்டம் தீய அரசியல் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டமும், திருத்தங்களும் நாட்டின் நலனுக்காகவோ அல்லது பொதுச் சமூகத்திற்காகவோ, முஸ்லிம்களுக்காகவோ இல்லை. இது ஆபத்தானது.