tamilnadu

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல்: மத போதகர் கைது

கோவையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடு பட்டு தலைமறைவாக இருந்த மத போதகரை போலீசார் கைது  செய்தனர். தென்காசி மாவட்டம், சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந் தர் ஜான் ஜெபராஜ் (35) என்பவர், கோவை ஜி.என்.மில்ஸ்  பகுதியில் வசித்து வருகிறார். இவர், மத போதகராகவும், கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரசங்கம் செய்து பிரபல மாகவும் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு  மே 21 ஆம் தேதி அவரது வீட்டில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி  ஒன்றில் பங்கேற்ற 2 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடு பட்டதாக ஜான் ஜெபராஜ் மீது அந்த சிறுமிகள் காந்திபுரம் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி, போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். தொடர்ந்து தலைமறைவான ஜான் ஜெபராஜை பிடிக்க  மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் 3 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே ஜான் ஜெபராஜ் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில  நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார். அவரை தீவிர மாக தேடி வந்த தனிப்படையினர் இந்த பரபரப்பான சூழ்நிலை யில் ஜான் ஜெபராஜ் ஆய்வாளர் அர்ஜூன் தலைமையி லான தனிப்படை போலீசார் கேரளா மாநிலம், மூணாறில் உற வினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சனி யன்று இரவு கைது செய்தனர். இதையடுத்து அவரை கோவை  காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். தொடர்ந்து, ஞாயிறன்று விடுமுறை  தினம் என்பதால், கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில்  பதிவு செய்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள நீதிபதி நந்தினி தேவி  முன்னிலையில் ஜான் ஜெபராஜ் நேர்நிறுத்தப்பட்டு, அவரை  15 நாட்கள் நீதிமன்ற காவலில்  அடைத்தனர்.

பாட்டி, பேரன் கொலை: போலீசார் விசாரணை

ஈரோடு, ஏப்.13- ஈரோடு மாவட்டம், தாள வாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டகாஜனூர் கிரா மத்தைச் சேர்ந்த மாதப்பா -  தொட்டம்மா தம்பதிக்கு ராக வன் (11) என்ற மகனும், அமிர்தா (13) என்ற மகளும் உள்ளனர். இதேகிராமத்தில் ராகவனின் பாட்டி சிக்கம்மா வும் (50) தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந் நிலையில், சனியன்று இரவு  ராகவன் தனது பாட்டி சிக் கம்மாவின் வீட்டுக்கு செல்வ தாக கூறி சென்றவர், ஞாயி றன்று காலை வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாதப்பா, சிக்கம்மா வீட் டுக்கு சென்ற போது அங்கு  ரத்த வெள்ளத்தில் 2 பேரும்  உயிரிழந்த கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத் திற்கு வந்த போலீசார் இரு  உடல்களை மீட்டு, பிரேத பரி சோதனைக்காக ஈரோடு  பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை, மாநிலங் களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் சனியன்று திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு கள் வழங்கினார். ஆட்சியர் ச.உமா உடனிருந்தார்.