ஆறுகள், கால்வாய், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: உயர்கல்வித்துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியில்'
தஞ்சை மாவட்டத்திற்குட்பட்ட 291 ஆறுகள், கால்வாய், வாய்க்கால்கள் பகுதியில் 1379 கிலோமீட்டர் தூரத்திற்கு 27 கோடி ரூபாய் திட்டத்தில் தூர் வாரும் பணிக்கு முதல்வர் உத்தவிட்டதைத் தொடர்ந்து, திருவிடைமருதூர் தொகுதி வேப்பத்தூர் பேரூராட்சி பட்டகாவெளி வாய்க்கால் தூர் வாரும் பணியினை தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கோவி. செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான சு.கல்யாணசுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன், முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில், முன்னாள் திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, திருப்பனந்தாள் ஒன்றிய துணை பெருந்தலைவர் அண்ணாதுரை, நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர் மனோகர், உதவி பொறியாளர் ஆசை தம்பி மற்றும் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.