tamilnadu

img

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலையை உயர்த்திய ஒன்றிய மோடி அரசை  கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர், மாதர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசு தொடர்ச்சி யாக, சமையல் எரிவாயு விலையை  உயர்த்தி வருகிறது. பெட்ரோல் மற் றும் டீசல் மீது சிறப்பு கலால் வரியை உயர்த்தப்பட்டதால் அதன் விலையும் அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே விலைவாசி உயர்வால்  பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த விலை உயர்வு, அன்றாட  வாழ்க்கையில் மிக மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே, ஒன்றிய அரசு உடனடியாக எரிவாயு  விலை மற்றும் சிறப்பு கலால் வரி  உயர்வை திரும்பப்பெற வேண் டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சனியன்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மலுமிச்சம் பட்டி நான்கு ரோடு சந்திப்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, முன் னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் எம்.சுப்பிரமணியம் தலைமை வகித் தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.இராமமூர்த்தி, தெற்கு நகரச் செயலாளர் கே. நாகேந்திரன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.சி.சண் முகம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.கருப்பையா, டி.பாலன் நினைவு இன்ஜினியரிங் சங்க பொதுச்செயலாளர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எம்.பஞ்சலிங்கம் நன்றி கூறி னார். இதேபோன்று மேட்டுப்பாளை யம் தாலுகாக்குழு சார்பில் கார மடையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, கட்சியின் கிளைச் செய லாளர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பனிர் கே.எஸ்.கனகராஜ், தாலுகா செய லாளர் கே.கனகராஜ், அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பழனிச்சாமி நன்றி கூறி னார். திருப்பூர் இதேபோன்று, மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு  மாநகரக்குழு சார்பில், கே.வி.ஆர்  நகர் பகுதியில் ஞாயிறன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கருவம் பாளையம் தெற்கு கிளைச் செயலா ளர் கோபாலகிருஷ்ணன் தலைமை  வகித்தார். இதில் தெற்கு மாநகரச் செயலாளர் த.ஜெயபால், மாநக ரக்குழு உறுப்பினர் பா.ஞானசே கர், சிஐடியு சுமைப்பணித் தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன், மாதர் சங்க கிளைச் செயலாளர் செண்பகவள்ளி உட் பட பலர் கலந்து கொண்டனர். மிஷின் வீதியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, தெற்கு மாநகரக்குழு  உறுப்பினர் ஏ.செல்லமுத்து தலைமை வகித்தார். இதில் தெற்கு  மாநகரச் செயலாளர் த.ஜெயபால்,  மாநகரக்குழு உறுப்பினர்கள் ஜி. செந்தில்குமார், பா.ஞானசேகர் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், கிளைச் செயலாளர் எல்.சுந்தர் ராஜன் நன்றி கூறினார். திருப்பூர் தெற்கு மாநகரம், கரு வம்பாளையம் பகுதியில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் சார்பில் சனியன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சங்கத்தின் மாந கரத் தலைவர் மினி தலைமை வகித் தார். இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.பானுமதி, மாவட்ட துணைத் தலைவர் சகிலா உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், பெத்தநாயக் கன்பாளையம் பேருந்து நிறுத்தம்  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, மாதர் சங்க நிர்வாகி ம.துளசி  தலைமை வகித்தார். இதில், சங்கத் தின் மாவட்டப் பொருளாளர் க. பெருமா உட்பட பலர் கலந்து கொண்டனர்.