நெல் அறுவடை கோபி
, ஏப்.13- தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன பகுதியில் தற்போது, நெல் அறுவடை தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை யிலிருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை வாய்க் காலில் திறக்கப்படும் தண்ணீ ரால் 24 ஆயிரம் ஏக்கர் விவ சாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நெல், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை விவ சாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த டிசம் பர் மாதம் நெல் சாகுபடிக் காக 120 நாட்களுக்கு தண் ணீர் திறக்கப்பட்டது. தற் போது விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை தொடங்கியுள்ளனர். இரு வகை அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.2500 முதல் ரூ.3000 வரை வாடகை கொடுத்து, நெல்லை அறுவடை செய்து வருகின்ற னர். எனவே, அறுவடை இயந்திரங்கள் தட்டுப் பாட்டை போக்கவும், விவசா யிகளுக்கு குறைந்த கட்ட ணத்தில் நெல்லை அறு வடை செய்ய அரசு சார்பில் (வேளாண் பொறியியல் துறை) அறுவடை இயந் திரங்கள் மூலம் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.