tamilnadu

img

திசைவழி காட்டிய மதுரை மாநாடு

 திசைவழி காட்டிய மதுரை மாநாடு

மகத்தான பேரணியுடன் மதுரையில் முடிவடைந்துள்ள கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு பல அம்சங்களில் குறிப்பிடத்தக்கதாகும். மாநாட்டின் நிகழ்ச்சிநிரலிலும் விவாதங்களின் உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் இருந்தன. முதலாவதாக, கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அரசியல் நடைமுறை உத்தியின் நிலைப்பாடு அமலாக்கம் தொடர்பான அரசியல் ஆய் வறிக்கை, வரைவு அரசியல் தீர்மானத்துடன் பிரதிநிதிகளின் விவாதத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கமாக, அரசியல் ஆய்வறிக்கை கட்சியின் அரசியல்-ஸ்தாபன அறிக்கையின் ஒரு பகுதியாகவே இருக்கும். அது அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர்தான் விவாதிக்கப்பட்டு வந்தது.  

மேம்படுத்தச் செய்ய வேண்டியவை

அரசியல் நடைமுறை உத்தி எப்படி அமல் படுத்தப்பட்டது என்பது தொடர்பாகவும், அப்போது அனுபவத்தில் நாம் எதிர்கொண்ட வலுவான மற்றும் பலவீனமான அம்சங்கள் எவை எவை என்பது தொடர்பாகவும் அரசியல் ஆய்வறிக்கையின் மீதான விவாதங்கள்  மிகவும் ஆழமாகவே அமைந்திருந்தன. இது, கட்சியின் சுயேச்சையான பலத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த காரணிகள் என்ன என்பதைப் புரிந்துகொள்ள கட்சிக் கிளைகளுக்கும், அணிகளுக்கும் உதவியது.  சென்ற 23ஆவது  மாநாட்டிற்குப் பின்னர் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 33,252 (3.37 சதவீதம்) உயர்வு இருந்தபோ திலும், அனைத்து வெகுஜன ஸ்தாப னங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 64 லட்சங்களாக இருந்துள்ளது என்ற போதி லும் நம்முடைய சுயேச்சையான பலத்தை அதிகரித்துவிட்டோம் என்றோ மற்றும் கட்சி யின் அரசியல் செல்வாக்கை அதிகரித்து விட்டோம் என்றோ திருப்திப்பட்டுக் கொள்ளக் கூடிய அளவிற்கு அந்த உயர்வுகள் இல்லை. எனவே, வரைவு அரசியல் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வரைவு ஸ்தாபன அறிக்கையின் மீதான விவாதம் ஆகிய இரண்டிலுமே இழையோடிக் கொண்டிருந்த முக்கிய அம்சம், கட்சியின் வலிமையையும், வெகுஜன ஸ்தாபனங்களையும் மேம்படுத்திட செய்ய வேண்டியவை என்ன என்பதேயாகும்.

முக்கியப்பணி

அரசியல் தீர்மானத்தில் முன்வைக்கப் பட்டுள்ள முக்கிய பணி, ஆர்எஸ்எஸ்/பாஜக-வைத் தனிமைப்படுத்தி தோற்கடிப்பது என்பது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் வலிமையை அதிகரிப்பதற்கான கட்டாயத் தேவையுடன் இணைக்கப்பட்டது. ஜனநாயகம், மதச்சார் பின்மை மற்றும் கூட்டாட்சிக் கோட்பாட்டைப் பாதுகாத்திட, பாஜக-வை எதிர்த்துப் போராடு வதற்கான பரந்த ஒற்றுமையைக் கட்டி யெழுப்ப மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து போராடும் அதே சமயத்தில், கட்சியின் வலுவை விரிவுபடுத்து வதற்கான அரசியல், சித்தாந்த மற்றும் ஸ்தாபன ரீதியான பணிகளுக்கும் முன்னு ரிமை அளித்திடும். இது தொடர்பாக, மாநாட்டில் நடந்த விவா தங்களும், நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானமும், இந்துத்துவா சித்தாந்தத்திற்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக மதவெறி அரசியலுக்கும் எதிராக தொடர்ச்சியான போராட்டத்தை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து சரி யான திசை வழியை வழங்கியுள்ளன. அனைத்து மட்டங்களிலும் உள்ள கட்சி, அரசி யல்,  கலாச்சார மற்றும் சமூகத் துறைகளில் சித்தாந்தப் பணிகளை முடுக்கிவிடும். இந்துத் துவா-கார்ப்பரேட் ஆட்சி நவ பாசிச பண்புக ளை (neo-fascist characteristics) வெளிப் படுத்துகின்றன, இது இந்தப் போராட்டத்தின் அவசரத்தைத் தூண்டுகின்றன.

மற்றொரு திசைவழி

அரசியல்-நடைமுறை உத்தியால் அளிக்கப்பட்டுள்ள மற்றுமொரு திசைவழி என்பது வர்க்க மற்றும் வெகுஜனப் போராட் டங்களை தீவிரப்படுத்துவதாகும். ஸ்தலப் போராட்டங்களை வளர்த்தெடுப்பதற்கு முக்கி யத்துவம் அளித்திட வேண்டும். இத்தகைய ஸ்தலப் போராட்டங்களே மக்களைக் கட்சியு டன் இணைத்திடும். மேலும் அவர்களை அரசி யல்ரீதியாக வலுப்படுத்திடவும் உதவிடும். நிலப்பிரபுக்கள்-பணக்கார முதலாளித்துவ விவசாயிகள்-ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பெரும் வணிகர்கள் அடங்கிய கிராமப்புற பணக் காரர்களின் கூட்டணிக்கு எதிராகக் கிராமப் புற ஏழை மக்களின் போராட்டம் கிராமப் புறங்களில் அடிப்படை வர்க்கப் போராட்ட மாகும்.

25 சதவீத இலக்கு

கட்சியின் சுயேச்சையான வலிமை மற்றும் வெகுஜன அடித்தளத்தை அதிகரிப்பது என்ற முக்கிய கருப்பொருளை ஸ்தாபன அறிக்கை எடுத்துரைத்திருக்கிறது. இந்த விஷயத்தில் முக்கிய அம்சங்கள் கட்சி உறுப்பினர்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் அடிப்படை அல கான கிளையை செயல்படுத்துவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகும். இந்தப் பணிகளில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. உறுப்பினர்களின் தரத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய அம்சம், கட்சியில் அதிகமான பெண்கள் மற்றும் இளை ஞர்களைச் சேர்ப்பதாகும். மொத்த உறுப்பி னர்களில் 20.2 சதவீதம் பெண்கள் உள்ளனர். அடுத்த கட்டமாக ஸ்தாபனம் குறித்த கொல் கத்தா பிளீனத்தால் நிர்ணயிக்கப்பட்ட 25 சதவீத இலக்கை அடைந்திட வேண்டும். கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணி, கட்சிக்கு அதிக எண் ணிக்கையிலான இளைஞர்களை ஈர்க்க வேண்டிய அவசியம். கட்சியின் கேரள பிரிவு அதன் மொத்த உறுப்பினர்களில் 29 சதவீதம் பேர் 31 வயது மற்றும் அதற்குக் குறைவான இளைஞர்களாக இருப்பதன் மூலம் பாராட்டத் தக்க பணியைச் செய்துள்ளது. அரசியல் தீர்மா னம் மற்றும் ஸ்தாபன அறிக்கை இரண்டும் இளைஞர்களை மையமாகக் கொண்ட அர சியல் தளத்திற்கும், இளைஞர்களிடையே உண்மையான மாற்றாக சோசலிசத்தைப் பரப்புவதற்கும் அழைப்பு விடுத்துள்ளன.

நம்பிக்கை விதைத்த மாநாடு

மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மத்தியக் குழுவில் 85 உறுப்பினர்களில் முப்பது புதிய முகங்கள் உள்ளன. குழுவில் பெண்க ளுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு 17 பெண் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 18 உறுப்பினர்க ளைக் கொண்ட அரசியல் தலைமைக்குழு மற்றும் புதிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி  ஆகியோர் புதிய மத்தியக் குழுவால் தேர்ந் தெடுக்கப்பட்டனர். மாநாட்டால் வகுக்கப்பட்ட அரசியல் மற்றும் ஸ்தாபனப் பணிகளைச் செயல்படுத்துவதில் இந்த புதுப்பிக்கப்பட்ட தலைமை மற்றும் குழுவை நம்பிடுவோம். 24ஆவது அகில இந்திய மாநாட்டை தமிழ்நாடு மாநிலக் குழு மிகவும் திறம்பட நடத்தி யது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் அனை த்து மட்டங்களிலும் கட்சி உறுப்பினர்கள் உற்சா கமாகப் பங்கேற்றனர். முன்னேறிச் செல்வதற் கான பாதை திறக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக் கையையும் உறுதியையும் அனைத்து பிரதிநிதி கள் மத்தியிலும் மாநாடு விதைத்திருக்கிறது. ஏப்ரல் 9, 2025      தமிழில்: ச.வீரமணி