அடிப்படை தேவைகளுக்காக தினமும் மலைச்சாரலில் 9 கி.மீ., பயணம்
அகமலை பழங்குடி மக்களுக்கு விடிவு காலம் எப்போது?
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை மலைச்சாரலி லும், போடிநாயக்கனூர் வட்டாரத்தி லும் உள்ளது அகமலை ஊராட்சி (Agamalai Gram Panchayat). போடி நாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக் கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்ட அகமலை 16 சிற்றூர்களை கொண்டது. 16 சிற்றூர்களிலும் 500க்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. அகமலை பழங்குடி மக்கள் காபி, மிளகு, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பயிர்களை நிலங்களில் பயிரிடுகின்ற னர். அவர்கள் பெரும்பாலானோர் விவ சாயத் தொழிலாளர்களாக உள்ள னர். வேலைக்குச் செல்லவோ, அத்தி யாவசியப் பொருட்களை வாங்கவோ, மருத்துவ வசதிகளை பெறவோ தின மும் 9 கிமீ.,க்கு மேல் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குறிப்பாக நோயாளிகளை ‘டோலி’ (மூங்கில் படுக்கை) மூலம் 9 கி.மீ., தூரம் தூக்கிச் சென்று சோத்துப்பாறை யில் (பெரியகுளம் அருகே உள்ள அணை) அவசர மருத்துவ சேவை களைப் பெறுவது அகமலை மக்களின் தினசரி வழக்கமாகிவிட்டது. சொக்க நிலையில் இருந்து சோத்துப்பாறை வரை செல்ல ஜீப்புகள் மட்டுமே கிடைக் கின்றன. அவை தனியார் நடத்துவ தால் ஒரு நபருக்கு ரூ.100 வசூலிக்கப்படு கிறது. அடிப்படை தேவைகளுக்காக 9 கி.மீ., பயணம் செய்து அல்லல்பட்டு வரும் அகமலை பழங்குடி மக்களுக்கு விடிவு காலம் எப்போது என கேள்விகள் சரமாரியாக எழுந்து வருகின்றன.
நிலைமை மோசம்
இதுதொடர்பாக தேனி பழங்குடி நலக்குழு உறுப்பினர் பி.கண்ணன் கூறு கையில்,”17 வயது எஸ்.ரஜினி என்ற சிறுவன் மரத்தில் இருந்து விழுந்து கடு மையான காயங்களுக்கு உள்ளானார். அவரை டோலியில் 10 கி.மீ., தூரம் சோத்துப்பாறைக்கு எடுத்துச் சென் றோம். அங்குதான் ஆம்புலன்ஸ் கிடைத் தது. இப்போது அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். கன்னகரையில் இருந்து சொக்கநலை வரை தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அமைக் கப்பட்ட 2 கி.மீ., சாலை மழையால் அரிக்கப்பட்டுவிட்டது. நிலைமை மேலும் மோசமாக வாய்ப்புள்ளது” என எச்சரிக்கை விடுத்தார்.
கிராமவாசிகள் குற்றச்சாட்டு
அகமலை கிராமவாசிகள் கூறுகை யில்,”முன்னாள் முதலமைச்சரும், போடிநாயக்கனூர் எம்எல்ஏ-வுமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக எம்.பி., தங்க தமிழ்செல்வன் ஆகியோர் கன்னகரையில் இருந்து மருதையனூர் வரை சாலை அமைப்பதாக வாக்கு றுதி அளித்தாலும், அது நிறைவேற வில்லை. தேனி மாவட்ட ஆட்சியர் மற் றும் தொடர்புடைய அதிகாரிகளிடம் மீண்டும் மீண்டும் மனுக்கள் சமர்ப்பித் தாலும், எந்த முன்னேற்றம் கிடைக்க வில்லை” என குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசு தரப்பில் விளக்கம்
பெயர் வெளியிட விரும்பாத அதி காரி ஒருவர் கூறுகையில்,”கன்னகரை - மருதையனூர் சாலை அமைப்பதற் கான முன்மொழிவுக்கு வனத்துறையின் இரண்டாம் கட்ட அனுமதிக்காக டிஆர்டிஏ (DRDA - District Rural Development Agency) காத்திருக்கி றது. கன்னகரை-சொக்கநலை சாலை யின் கிராவல் அடித்தளப் பணிகள் முடிந்துவிட்டன, கான்கிரீட் பூசுதல் பணி கள் மட்டும் மீதமுள்ளது” என்றார். இந்த பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கூறுகையில், “சமீபத்திய ஒரு பொது மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் இந்த மக்களின் துயரை அறிந்தேன். தொடர்புடைய அதிகாரி களுடன் விரைவில் கூட்டம் நடத்தி, சாலை அமைப்பு பணிகளை துரிதப் படுத்துவேன்”என அவர் உறுதியளித்தார்.