tamilnadu

img

விளையாட்டு...

இன்று லக்னோ அணியுடன் மோதல்

தொடர் தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? 

5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் இதுவரை இல்லாத அளவில் மிக மோச மான அளவில் திணறி வருகிறது. முதல் போட்டியில் மட்டும் வெற்றி  பெற்று சென்னை அணி, அடுத்த  5 போட்டிகளில் தொடர் தோல்வி யை சந்தித்து வருகிறது. இதனால்  சென்னை அணியை தீவிர ரசி கர்களே கழுவி ஊற்றி வருகின்ற னர். இந்நிலையில், திங்களன்று நடை பெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில்  சென்னை - லக்னோ அணிகள் மோது கின்றன. இந்த ஆட்டத்திலாவது சென்னை அணி வெற்றி பெற்று தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எண்ணத்துடன் ரசிகர்கள் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். தோல்வி நடைக்கு முற்றுப்புள்ளி வைக்க லக்னோ அணியை வீழ்த்தும் முனைப்பில் சென்னை அணியும், சென்னை அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் மேல் நோக்கி நகரும் முனைப்பில் லக்னோ அணியும் என இரு அணி களும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த ஆட்டம் பர பரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாற்றத்துக்காக பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கிய பெங்களூரு

ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் பெங்களூரு அணி நீலம், சிவப்பு கலந்த ஜெர்சியில் (சீருடை) விளையாடி வரும் நிலையில், விடுமுறை நாளான ஞாயி றன்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற ஜெர்சியில் விளை யாடினர். பெங்களூரு அணி பச்சை  நிற ஜெர்சியில் விளையாடு வது இது முதல் முறை அல்ல. 2011ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் பச்சை நிற ஜெர்சி  அணிந்து விளையாடி வரு கிறது. இந்த பச்சை நிற  ஜெர்சி தேர்வுக்கு பின்னால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாற்றத்துக்கான முன்னேற் பாடுகள் இருக்கின்றன.  அதாவது “கோ கிரீன்(Go Green)” என்று இயற்கையைக் காக்க அனைவரும் தனது வாழ்க்கையில் அதிக மரங்  களை நடவேண்டும் என்பதை  காட்டுவதே பச்சை நிற ஜெர்சி யின் நோக்கம் ஆகும். மேலும்,  வீரர்களின் ஜெர்சியில் மறு சுழற்சி செய்யப்பட்ட துணியால் நையப்பட்டது. இது பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

5,000 ரசிகர்களுக்கு 6,700 பாதுகாவலர்கள்

இது பாகிஸ்தான் ஸ்டைல்

இந்தியாவில் ஐபிஎல் தொடரைப் போல பாகிஸ்தான் நாட்டில்  பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்)  என்ற பெயரில் டி-20 லீக் தொடர் நடை பெற்று வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான பிஎஸ்எல் தொடர் சனிக்கிழமை அன்று தொடங்கியது. கராச்சியில் முதல் போட்டி பல்வேறு துவக்க விழா நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. ரசிகர்கள் மைதானம் முழு வதும் நிரம்பி வழிவார்கள் என்ற எண் ணத்தில் சுமார் 6,700 பாதுகாவலர்கள் அழைக்கப்பட்டு மைதானம் முழுவதும் சுற்றி நிறுத்தப்பட்டு இருந்தனர்.  ஆனால், வேடிக்கை என்னவெனில் மொத்தமே 5,000 ரசிகர்கள் தான் மைதா னத்திற்கு நேரில் வந்தனர். ரசிகர்கள் எண்  ணிக்கையை விட பாதுகாவலர்கள் எண் ணிக்கையே அதிக அளவில் இருந்தது.

இன்றைய ஆட்டம் சென்னை - லக்னோ நேரம் : இரவு 7:30 மணிக்கு இடம் : எகானா மைதானம், லக்னோ, உ.பி., சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஹாட் ஸ்டார் (ஓடிடி)